CPS ஊழியரின் பங்குத்தொகை 14% ஆக உயர்த்தியதை மத்திய அரசு ஊழியருடன் ஒப்பீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 1, 2022

CPS ஊழியரின் பங்குத்தொகை 14% ஆக உயர்த்தியதை மத்திய அரசு ஊழியருடன் ஒப்பீடு

CPS ஊழியரின் பங்குத்தொகை 14% ஆக உயர்த்தியதை மத்திய அரசு ஊழியருடன் ஒப்பீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கான NPS பங்குத்தொகை 01.04.2019 முதல் 14% ஆக உயர்த்தப்பட்டது.

தற்போது இந்த பட்ஜெட்டில் தெளிவாகக் கூறியுள்ளனர் மத்திய அரசு ஊழியர்களுக்கிணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் வித்தியாசமின்றி NPS பங்குத்தொகை 14 % உயர்த்துவதாக தெரிவித்துள்ளனர்.

ஆகவே முதலில் மாநில அரசு ஊழியர்களுக்கு வித்தியாசமின்றி மத்திய அரசு ஊழிர்களுக்கிணையாக ஊதியம் வழங்குவதற்கும் அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆறாவது ஊதியக்குழுவில் *2800* மற்றும் *4800* தர ஊதியம் பெற்ற தமிழ்நாட்டின் மாநில அரசு ஊழியருக்கு ஏழாவது ஊதியக்குழுவில் முறையே *20600 && 36900* நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசு ஊழியருக்கு *2800 && 4800* தர ஊதியத்திற்கு ஏழாவது ஊதியக்குழுவில் *29200 && 47600*

மாநில அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட *2800* தர ஊதியத்தில் *29.5%* மும் *4800* தர ஊதியத்திற்கு *22.5%* மும் மத்திய அரசு ஊழியர்களை விடக் குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக CPS பங்குத்தொகை 14% ஆக உயர்த்தப்பட்டால் மாநில அரசு ஊழியர்கள் கூடுதலாக மத்திய அரசு ஊழியர்களை விட 2800 தர ஊதியம் பெற்ற மாநில அரசு ஊழியர் 33.5% மும் 4800 தர ஊதியம் பெற்ற மாநில அரசு ஊழியர் 26.5% ஊதியம் குறைவாக பெற வேண்டிய நிலை வரும். இது அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.

1947 முதல் 1988 வரை மத்திய அரசு ஊழியர்களை விட மாநில அரசு ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் பெற்று வந்தனர்.

1988 ல் அரசு ஊழியர் சங்கத்தின் போராட்டத்தால் 1988 முதல் 2016 வரையிலான ஊதிய மாற்றத்தில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது.

2016-ல் வழங்கப்பட்ட ஊதியமாற்றத்தில் மாநில அரசு ஊழியர்களுக்கு 30% வரை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்தை மாற்றியமைத்துவிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கிணையாக CPS பங்குத்தொகை 14% பிடிக்கலாம் என அரசு ஊழியர் ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.