அவசரம் காட்டுவது ஏன்? பள்ளிகள் திறப்பால் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது - அன்புமணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 1, 2022

அவசரம் காட்டுவது ஏன்? பள்ளிகள் திறப்பால் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது - அன்புமணி

தமிழகத்தில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவையடுத்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.``` ``` தொடர்ந்து மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்று கொண்டு இருக்கின்றனர் பள்ளிகளுக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு முக கவசம் அணிந்து உள்ளதா என சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

மாணவர்களுக்கு அறிவுறுத்தல்மேலும் மாணவ மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு மற்றும் கைகளில் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அனைத்து வகுப்புகளுக்கும் இன்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் வருகை பதிவு 100% இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில் காய்ச்சல் சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு உத்தரவு1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது``` ```

100% மாணவருடன் பள்ளிகள் செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது போலவே தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கற்பித்தலுக்கான நாட்கள் குறைவாக உள்ளதால் பாடங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் முழு வீச்சில் விரைந்து நடவடிக்கை முடித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் உத்தரவிடப்பட்டுள்ளது

.அன்புமணி கோரிக்கைஇந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளை திறக்கும் முடிவை தள்ளிவைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது! ,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கலாம். ஆனால், திரும்பிய திசையெல்லாம் கொரோனா பாதிப்பை பார்க்க முடிகிறது.``` ``` இத்தகைய சூழலில் பள்ளிகளைத் திறந்து தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது!திறப்பை தள்ளி வைக்க வேண்டும்பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் தான் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்? பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அதற்கானத் தேவையில்லை. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும்! " என பதிவிட்டுள்ளார்..

2 comments:

  1. ,வன்னியர் குழந்தைகள் மட்டுமா?,அல்லது அனைத்து குழந்தைகள் மேல் அக்கறையா?

    ReplyDelete
  2. சாதி அரசியல் ஒழிய வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.