நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஊரக திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு - தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 31, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஊரக திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு - தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி ஊரகதிறனாய்வு தேர்வு வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள தாக தேர்வுத்துறை இயக் குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிராமப் புற மாணவர்களை ஊக் குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட் டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தி லும் தலா 50 மாணவர் கள் தேர்வுசெய்யப்பட்டு ஆண்டுக்கு 71,000 வீதம் தொடர்ந்து 4 வருடங்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாண வர்கள் தேர்வு எழுதலாம். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் 1லட் சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதன்படிநடப் பாண்டுக்கான ஊரக திற னாய்வுத் தேர்வு ஜனவரி மாதம் நடக்க இருந்தது. கொரோனா பரவல் கார ணமாக வரும் பிப்ரவரி 20ம்தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்கூறியிருப்ப தாவது:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊரக திறனாய்வு தேர்வு பிப்ரவரி 27ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள் ளது. இந்த தகவலை தேர் வுக்கு விண்ணப்பித்த அனைத்துமாணவர்களுக் கும்,பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் வாயிலாக தெரிவிக்க முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண் டும். கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிய லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.