வகுப்புக்கு செல்லாத ஹெச்.எம்.,கள் மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 8, 2026

வகுப்புக்கு செல்லாத ஹெச்.எம்.,கள் மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு

வகுப்புக்கு செல்லாத ஹெச்.எம்.,கள் மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு



This news article highlights how headmasters ("HM") not teaching classes affects students' education.

It notes a discrepancy between Tamil Nadu educational rules, which require HMs to teach 10 classes and assistants 20, and the actual workload where HMs are only meant to teach 14.

The text suggests HMs and assistants struggle to balance administrative duties with teaching, impacting students' learning.

It calls for the government to appoint additional teachers and administrative staff to solve this issue.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பாடம் நடத் தாததால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப் படும் சூழல் உருவாகி உள்ளது.

இது குறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறிய தாவது: தமிழக கல்வி விதி களின்படி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஒரு வாரத்துக்கு 10 பாட வேளைகளையும், உதவி தலைமை ஆசிரியர்கள், 20 பாட வேளைகளையும் கையாள வேண்டும்.

அத்துடன், ஆசிரியர்கள் மற்ற நன்றாக பாடம் நடத்துகின்றனரா என, மாதத்துக்கு தலா, 20 பாட வேளைகளை கண்கா ணித்து, மொபைல் செயலி யில் பதிவிட வேண்டும்.

மற்ற ஆசிரியர்களுக்கு வாரம் 28 பாட வேளை களை ஒதுக்க வேண்டும்.

அதேசமயம், அரசு வழங்கியுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான கையேட்டில், உதவி தலைமை ஆசிரியருக்கு வாரம், 14 பாடவேளைகள் ஒதுக்க வேண்டும்.

மற்ற பாட வேளை களில் தலைமை ஆசிரியரு டன் இணைந்து, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப் பட்டு உள்ளது.

அதாவது, கல்வி விதி களில், 20 பாட வேளைகள் என்றும், தலைமை ஆசிரியர்களுக்கான கையேட்டில், 14 பாட வேளைகள் என்றும் மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சில உதவி தலைமை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் கையேட்டை மேற்கோள் காட்டி, தலைமை ஆசிரி யர்கள், 10 பாட வேளை களை கையாண்டால் மட்டுமே, தங்களால், 14 பாடவேளைகளை கவனிக்க முடியும் என்று கறாராக கூறி விடுகின்றனர்.

தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர், அலுவலக பணிகளையும் கவனிக்க வேண்டி இருப்பதால், அவர்களுக்கு ஒதுக்கப் படும் பாட வேளை யில் பாடம் நடத்துவது சிரமமாக உள்ளது.

அந்த அதேநேரம், பாடங்களுக்கு வேறு ஆசிரி யர்களும் நியமிக்கப்படுவ தில்லை. இதனால், மாண வர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

எனவே, மாணவர் களின் விகிதத்துக்கு ஏற்ப, கூடுதல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணி யாளர்களை அரசு நியமிக்க வேண்டும்.

அவர்கள் இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.