பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட DEE Proceedings Proceedings of the DEE regarding the celebration of the birthday of the great leader Kamarajar as 'Education Development Day' in schools on behalf of the government.
CLICK HERE TO DOWNLOAD பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட DEE Proceedings PDF
கர்மவீரர் காமராஜர் பிறந்த ஜூலை-15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் சிறப்பாக கொண்டாட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 007719/சி4/2026, நாள் : 04.06.2026
பொருள்
தொடக்கக்கல்வி 2026-2027 ஆம் கல்வியாண்டு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட அனுமதியும் சிறப்பு பரிசளிப்புத் திட்டம் மாவட்டத்திற்கு 75,000 வீதம் 38 மாவட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிடுதல் - சார்பு. பார்வை
1. அரசாணை (நிலை) எண்.169 ப.க.(என்)துறை, நாள் 06.07.2012.
2. அரசாணை (நிலை)எண்.123 பள்ளிக்கல்வி (ப.க.5(1)த் துறை, நாள்.15.07.2013.
3 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 006366/C-1/2026, . நாள் 16.04.2026.
4. அரசாணை (நிலை) எண்.10, பள்ளிக் கல்வி (பொது1(2) துறை, நாள் 11.01.2023.
5. அரசுக் கடிதம் (நிலை)எண். efile 11915/பொது1(2) 2023-1, நாள் .24.11.2023.
பார்வை 1-இல் காணும் அரசாணையில் பெருந்தலைவர், காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது சார்ந்த. 2012-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேற்காண் விழாவிற்கென ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை ஊக்குவிப்பதற்கான "பரிசளிப்பு திட்டம் ( (Award Scheme)" ஒன்றினை ஏற்படுத்தவும், அத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் மூன்று சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்திடவும் உரிய ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த மாவட்டத்தில் உள்ள சிறந்த ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கப்பள்ளிக்கு ரூ.25,000/- (ரூபாய் இருபத்து ஐந்தாயிரம் மட்டும்) மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) என பரிசுத் தொகை கணக்கிட்டு 38 மாவட்டங்களில் உள்ள 38 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு காமராசர் பிறந்த நாள் சிறப்பு பரிசளிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து 2026-2027 ஆம் ஆண்டிற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாக அரசின் சார்பில் கொண்டாடும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் விழாவினை சிறப்பாக நடத்திட அனுமதியும், வருவாய் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளியினை தேர்வு செய்து பரிசுகளை வழங்கிடவும், தொடக்கக் கல்வித் துறைக்காக ரூபாய் 28,50,000/- நிதி ஒதுக்கீடு செய்து பார்வை 3-இல் காணும் கடிதத்தின் மூலம் ஆணையிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு பிரித்து வழங்கிடும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
பார்வை 5-இல் குறிப்பிட்ட அரசுக் கடிதத்தின்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையினை கீழ்க்கண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாரியாக பகிர்ந்து அளித்து ஆணையிடப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் அரசின் சார்பில் விழா கொண்டாட DEE Proceedings PDF
மேற்படி, ஒப்பளிக்கப்பட்ட செலவினத் தொகையினை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் பெற்று சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மூலம் வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், மேற்படி 2026-2027 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை முழுவதையும் செலவு செய்து, அதன் தொடர்புடைய பயன்பாட்டு (Utilization Certificate) சான்றினை 31.12.2026-க்குள் உரிய ஆதார ஆவணங்களுடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், கல்வி வளர்ச்சி நாளிற்கான சிறப்பு பரிசளிப்புத் திட்ட தொகைக்காகவும் மற்றும் கல்வி வளர்ச்சி பணிகளுக்காகவும் வழங்கப்படும் இத்தொகையினை அதன் பயன்பாட்டிற்காக மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்பதையும் இதர பயன்பாட்டிற்காக கண்டிப்பாக பயன்படுத்த கூடாது எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.