ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET–2025) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, July 18, 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET–2025) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு



📢 *ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET–2025) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு*

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), ஆசிரியர் தகுதித் தேர்வு–2025 (தாள்–I & தாள்–II) மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை (Genuineness Certificate) பெறுவதற்கான செயல்முறைகளை வெளியிட்டுள்ளது.

✅ *முக்கிய அம்சங்கள்: •*

TNTET–2025 தாள்–I மற்றும் தாள்–II தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

• தனிநபர்கள் நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பிக்கக் கூடாது.

• ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளித் தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


• பள்ளித் தலைமையாசிரியர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து வட்டாரக் கல்வி அலுவலருக்கு (BEO) அனுப்ப வேண்டும்.

• வட்டாரக் கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலருக்கு பரிந்துரையுடன் அனுப்ப வேண்டும்.

• மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் மட்டுமே TRB உண்மைத்தன்மைச் சான்றிதழ் வழங்கும்.

• பள்ளிகள் அல்லது வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இருந்து தனித்தனியாக TRB-க்கு விண்ணப்பங்கள் அனுப்பக் கூடாது.

📝 *குறிப்பு:* உண்மைத்தன்மைச் சான்றிதழ் பெற விரும்பும் ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளியின் தலைமையாசிரியரை உடனடியாக தொடர்புகொண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– *தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)*

*செயல்முறைகள்:* ந.க.எண்.01489/T.S1/2026, நாள்: 01.07.2026

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.