பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில் நிரப்பத்தகுந்த ஆசிரியர் காலிப்பணியிட விவரம் வெளியிட நடவடிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 23, 2026

பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில் நிரப்பத்தகுந்த ஆசிரியர் காலிப்பணியிட விவரம் வெளியிட நடவடிக்கை

நிரப்பத்தகுந்த ஆசிரியர் காலிப்பணியிட விவரம் எமிஸில் நாளை வெளியிட நடவடிக்கை

பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில் - நிரப்பத்தகுந்த ஆசிரியர் காலிப்பணியிட விவரம் எமிஸில் நாளை வெளியிட நடவடிக்கை :

பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்கவுள்ள நிலையில்

நிரப்பத்தகுந்த ஆசிரியர் காலிப்பணியிட விவரம்

கிருஷ்ணகிரி, ஜூன் 24: தமி ழகத்தில் வரும் 1ம் தேதி முதல் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில், நிரப்பத்தகுந்த ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை நாளை எமி ஸில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணி புரிந்து வரும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப் பட்டு வருகிறது. அதன் படி நடப்பாண்டிற்கான கலந்தாய்வு வரும் 1ம் தேதி தொடங்குகிறது.

இதற் காக மாறுதல் கோரும் ஆசிரியர்களிடம் இருந்து ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதனி டையே, தற்போதைய நில வரப்படி, மாநிலம் முழுவ தும் உள்ள நிரப்பத்தகுந்த ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் நாளை எமி ஸில் வெளியிடப்படவுள் ளது. இதுதொடர்பாக கல் வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத் தில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்க கத்தின் சார்பாக நடப்பு 2026-2027ம் ஆண்டிற் கான அனைத்துவகை ஆசிரியர்கள் பொதுமா றுதல் கலந்தாய்வு வரும் 1ம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்ட வணை மற்றும் மாறு தல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் சார்பான அறிவுரை கள் ஏற்கனவே வழங் கப்பட்டன. தொடர்ந்து காலிப்பணியிட விவ ரங்கள் நாளை (25ம் எமிஸில் நாளை வெளியிட நடவடிக்கை

டப்படுகிறது. இதற்காக தேதி) எமிஸில் வெளியி ஏற்கனவே, மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்கள், தங்கள் மாவட் டங்களில் தற்போதைய நிலவரப்படி காலியாக உள்ள அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை, எமிஸ் இணையதளத்தில் அந்தந்த மாவட்டத்திற் கென ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ள ஐடியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்பட் டது.

இதில், ஒரு மாதத்திற்கு மேல் எவ்வித தகவலு மின்றி வருகைபுரியாமல் உள்ள ஆசிரியர்களின் பணியிடங்களை பொது மாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடமாக கரு தலாம். மேலும், புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணி யிடத்தினையும், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 125 கணினிபயிற்றுநர் நிலை-1 பணியிடங்களையும் காலிப்பணியிடமாக கருத லாம்.முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை பொறுத்தவரை யில் பணிநிரவல் கலந் தாய்வு நடைபெறவுள்ளது.

இதனால், இப்பணியிடங் களுக்கு 01.08.2025 நிலவரப் படி கணக்கிட்டப்பட்ட தில் கூடுதல் தேவையுள்ள பணியிடங்களையும் பதி வேற்றம் செய்ய அறிவுறுத் தப்பட்டது. இக்கூடுதல் தேவையுள்ள பள்ளிக ளின் விவரம் பணி நிர வல் கலந்தாய்விற்கு மட் டுமே பயன்படுத்தப்படும். பொதுமாறுதல் கலந்தாய் விற்கு காண்பிக்கப்பட மாட்டாது. எனவே, எவ்வித தவ றுகளும் இன்றி அனைத் துவகை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை எமிஸில் பதிவேற்றம் செய்திடுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. காலிப்ப ணியிட விவரங்களை பதிவேற்றம் செய்தபிறகு அதன் ஒரு பிரதியினை நக லெடுத்து முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பத்துடன் பதவி வாரியாக வரும் 26ம் தேதிக்குள் அனுப்பிவைத் திட வேண்டும்.

மேலும், காலிப்பணி யிட விவரங்கள் எமிஸில் இறுதியாக வெளியிடப் பட்ட பின்னரோ அல்லது கலந்தாய்வு நடைபெறும் நாளன்றோ காலிப்பணி யிடங்களை எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்யவோ, திருத்தங்கள் செய்யவோ, சேர்க்கை செய்யவோ அனுமதிக் கப்படமாட்டாது.

அவ் வாறு ஏதேனும் ஏற்படின் இதற்கு முழுப்பொறுப்பும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களையே சாரும். மேலும், உரிய நடவடிக் கையும் மேற்கொள்ளப்ப டும். இதனை கவனத்தில் கொண்டு அனைத்துவகை ஆசிரியர்களின் காலிப்ப ணியிடங்களை சரியாக பதிவேற்றம் செய்திட முதன்மைக் கல்வி அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அதி காரிகள் தெரிவித்தனர்.

This Tamil newspaper clipping outlines the process for identifying vacant teacher positions (Asiriyar Kalipani) for the upcoming 2026-2027 general transfer counseling.

District educational officers are instructed to upload the details of these vacancies to the EMIS portal by the specified deadline.

Schools must verify their vacancy lists, and any necessary corrections or additions must be made by the District Educational Officers before the final publication.

The counseling process is scheduled to begin in the coming days, based on the uploaded data.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.