100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு தலா ₹3,000 ரொக்கப்பரிசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 11, 2026

100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு தலா ₹3,000 ரொக்கப்பரிசு



100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு தலா ₹3,000 ரொக்கப்பரிசு

Cash prize of ₹3,000 each for teachers who achieved a 100% pass rate

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு (பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் மட்டும்) தலா ₹3,000 ரொக்கப்பரிசு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் - செய்தி வெளியீடு

Topic: This Tamil text announces a government educational incentive award.

Recipients: A total of 2,090 individuals, including students, teachers, and headteachers, are receiving awards.

Funding Amount: The total amount distributed is approximately ₹72.03 lakhs.

Purpose: The awards recognize high academic performance in the 10th and 12th standard public examinations.

மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 2090 பேருக்கு ரூ.72.03 இலட்சம் மதிப்பில் கல்வி ஊக்கத்தொகையினை இன்று வழங்கினார். மாண்புமிகு பள்ளிக்கல்வி தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், ரிப்பன் கட்டட வளாகம் அம்மா மாளிகை கூட்டரங்கில் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று (10.06.2026) நடைபெற்ற விழாவில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,085 மாணவ மாணவியர் மற்றும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற உறுதுணையாக இருத்த 1005 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 2000 பேருக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கிப் பாராட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் 206 όλα αδε ότι και தொடக்கப்பள்ளிகள் 130 சென்னை நடுநிலைப் பள்ளிகள், 40 சென்னை உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 சென்னை மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 417 சென்னை பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் 108.178 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதில் 46 சென்னை உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 சென்னை மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 81 சென்னை பள்ளிகளில் 2025-26ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 22 பள்ளிகள், 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 24 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த 24 பள்ளிகளுக்கு தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம். கல்வி ஊக்கத்தொகையினையும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திய 34 பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5.000/- இரண்டாம் பரிசாக ரூ.3.000/- மூன்றாம் பரிசாக ரூ.2,000/-மு 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 500-க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 293 மாணவர்களுக்கு தலா ரூ.1.500 வீதமும், பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்ற 30 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 வீதமும். பாடவாரியாக 100% தேர்ச்சி அளித்த 391 ஆசிரியர்களுக்கு தலா ரூ3000 வீதமும் மாணவர்கள் பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த 30 ஆசிரியர்களுக்கு தலா ரூ.1.500 வீதமும் ரொக்கப்பரிசினையும். 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 500-க்கு 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 749 மாணவர்களுக்கு தலா ரூ.1.500 வீதமும் பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற்ற 13 மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும், பாடவாரியாக 100% தேர்ச்சி அளித்த 513 ஆசிரியர்களுக்கு தசை ரூ.3,000 வீதமும் மாணவர்கள் பாடங்களில் 100/100 மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த 13 ஆசிரியர்களுக்கு தலா ரூ.1.500 வீதமும் என மொத்தம் 2090 மாணவர்கள், தலைமையாசிரியர்கள் ஆசியர்களுக்கு ரூ.72.03 இலட்சம் மதிப்பில் கல்வி க்கத்தொகையினை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்கள் வழங்கிப் பாராட்டினார்.

இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வி. தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னைப் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி ஊக்கத்தொகை பெற வருகைத் தந்துள்ள மாணவர்களின் சிரித்த முகத்தை காணும்பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த மேடையில் மாணவர்களாகிய நீங்கள் வாங்குகின்ற ஊக்கத்தொகை உங்களுடைய அப்பா, அம்மாவிற்கு வாழ்வில் நோபல் பரிசு கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அடைவார்கள். இதேபோன்று பள்ளி ஆசிரியர்களும் கூடுதல் மகிழ்ச்சி அடைவார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை ஒரு சிற்பி கல்லை செதுக்கி சிலையாக்குவதைப் போல உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று அழகு பார்கிறார்கள். அதனைப் புரிந்து கொண்டு மாணவர்கள் ஆசிரியர்களை மதித்து நன்கு கற்க வேண்டும். ஆசிரியர் பெருமக்கள் மாணவர்களுடன் நட்பாக பழகிட வேண்டும். அதேபோன்று மாணவர்கள் எந்தெந்த பாடப்பிரிவுகளில் ஆர்வமுள்ளவர்கள் என்று கண்டறிந்து அவர்களுக்கு தூண்டுகோலாக இருந்து அவர்களது கல்வி ஆர்வத்தை உற்சாகப்படுத்தி, கற்பித்திட வேண்டும். அன்பிற்கினிய ஆசிரியர் பெருமக்கள் உங்கள் சகோதரனாக சொல்கிறேன். அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறீர்களோ. அதேபோல் மெல்ல கற்கும் மாணவர்களுக்கும் ஊக்கம் அளித்து கல்வி கற்பித்திட வேண்டும்.

அவர்களுக்கு ஊக்கமான வார்த்தைகளையும் நேர்மறையான கருத்துகளையும் தெரிவித்திட வேண்டும். நம்முடைய தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தான் இன்று பன்னாட்டு நிறுவனங்களில் உயர் அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று மாணவர்களாகிய நீங்களும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டும் எத்தனை உயர்ந்த நிலைக்கு சென்றாலும் உங்களுடைய உயர்வுக்கு விதைவிதைத்த பள்ளியை மறக்காமல் அப்பள்ளிக்கே சிறப்பு விருந்தினராக வரவேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள். பெற்றோர்கள், பொதுமக்களை ஒரு தாயின் மடியைப்போல தாங்கக் கூடிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இவ்விழாவில் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார். ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப. இணை ஆணையாளர் (கல்வி) திருமதி க. கற்பகம். இ.ஆ.ப. நிலைக்குழுத் தலைவர் (கல்வி) திரு. த. விசுவநாதன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாணவ, மாணவியர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள். கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

This document is a formal statement from the Minister for School Education, Tamil Language, Culture, and Archaeology regarding educational incentives for students in Chennai Corporation schools.

Incentives for Excellence: High-scoring students in 10th and 12th-grade government exams received educational incentives, bringing joy to both students and their parents.

Role of Teachers: Teachers are likened to sculptors shaping students, and the Minister urged them to interact friendly with students and identify those with learning difficulties to provide extra support

CLICK HERE TO DOWNLOAD 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு தலா ₹3,000 ரொக்கப்பரிசு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.