போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - இயக்குநர்களின் செயல்முறைகள்
Proceedings of the Directors of School Education and Private Schools, Tamil Nadu, regarding the conduct of anti-drug awareness programs.
போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்குதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06
ந.க.எண்.000987/எம்1/இ1/2026
பொருள் : பள்ளிக்கல்வி
பார்வை
- நாள்:09.06.2026
2026- 2027 ஆம் கல்வியாண்டு தொடக்கத்தில் மாணவர்களுக்கு பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வழங்குதல்-மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்பு
: அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால், தலைமைச் செயலகம், அவர்களின் கடித. எண்.15670/H,P&E(xvI)/2026-2, நாள்;03.06.2026
***** தமிழ்நாடு 2026-2027 ஆம் கல்வியாண்டு அனைத்து வகை பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும், ஏற்கனவே மாவட்ட பயிற்றுநர்களுக்கான பயிற்சியானது உள்துறை மூலம் வழங்கப்பட்டு அவர்கள் மூலமாக பள்ளி போதைப் பொருள் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி நடத்திமுடிக்கப்பட்டது. தற்போது பள்ளி போதைப் பொருள் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு சார்ந்த பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திடவும் இப்பொருள் சார்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் கலந்தாலோசித்து செயல்படுத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை காவல்துறை மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களை ஒருங்கிணைத்து இம்மாத இறுதிக்குள் நடத்திமுடித்திடவும், இணைப்பில் கண்டுள்ள இணையவழி பூர்த்தி படிவத்தை பள்ளி போதைப் பொருள் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு பூர்த்தி செய்திடவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
இணைப்பு : பயிற்சி கையேடு மின்நகல் & இணையவழி பூர்த்தி படிவம்.
இயக்குநர்
09.06.26
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர்கள்,
அனைத்து மாவட்டங்கள்.
நகல் 1. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம்,
சென்னை-09 (தகவலுக்காக பணிந்து அனுப்பலாகிறது) 2. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை,மதுவிலக்கு மற்றும் கலால்துறை,
தலைமைச் செயலகம், சென்னை-09 (தகவலுக்காக பணிந்து அனுப்பலாகிறது) தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-6 ந.க.எண்.04507/ஈ1/2026 நாள் 8.06.2026 பொருள்
பள்ளிக்கல்வி பார்வை
தனியார்பள்ளிகள். மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு. போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வுத் திட்டத்தை நடத்துவதன் மூலம் 'போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு' திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்புதல்- சார்பு
: அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் D.O.No.15670/H,P&E(XVI)/2026 dated 03.06.2026,
பார்வையில் உள்ள அரசுக்கடிதம்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வுத் திட்டத்தை நடத்துவதன் மூலம் 'போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு' திட்டத்தை முன்னெடுப்பது சார்ந்து தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கு பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது
அனைத்துப் பள்ளி போதைப்பொருள் மன்றங்களின் ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாவட்ட முதன்மைப் பயிற்றுநர்கள் மூலம் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உறுதிசெய்ய போதைப் பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் குறித்து பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு அதை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற இலக்கை அடையும் நோக்கில், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியின் சார்ந்த விவரங்களை கீழ்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://forms.gle/Z4UMYD91vFxL5M636 எனவே மேற்கண்ட பொருள் சார்ந்து அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு (தனியார்பள்ளிகள்) இணைப்பில் உள்ள கடிதம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சுற்றறிக்கை அனுப்பி உரிய வழிகாட்டுதல்கள் வழங்கிடவும், மேலும் இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை இவ்வியக்கத்திற்கு உடன் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்(தனியார்பள்ளிகள்) அறிவுறுத்தப்படுகிறது.
இணைப்பு
போதைப்பொருள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.
பெறுநர்
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்
(தனியார்பள்ளிகள்)
Abri stefat தனியார்பள்ளிகள் இயக்குநர்.
அரசுக்கூடுதல் செயலாளர், உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு - இயக்குநர்களின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.