24 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி - கலந்தாய்வுக்கு முன் நிரப்ப ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 23, 2026

24 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி - கலந்தாய்வுக்கு முன் நிரப்ப ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

Vacancies Identified: There are 24 vacant District Educational Officer (DEO) positions across Tamil Nadu.

Teacher Demands: Teachers are requesting that these positions be filled before the upcoming general transfer counseling.

Administrative Issues: Legal challenges have left over 1,000 headmaster positions vacant, causing teachers to take on additional responsibilities and affecting classroom teaching.

Upcoming Counseling: General transfer counseling is scheduled to begin on July 2nd.

24 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி



24 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி

கலந்தாய்வுக்கு முன் நிரப்ப ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு தமிழகத்தில் 24 மாவட்டகல்வி/டி.இ.ஓ.,), முதன்மை கல்வி அலுவ லர் (சி.இ.ஓ.,) பணியிடங் கள் காலியாக உள்ளன. இவற்றை பொதுமாறுதல் கலந்தாய்வு நடப்பதற் குள் நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் எதிர் பார்க்கின்றனர்.

கல்வித்துறையில் வழக்குகள் காரணமாக தொடக்க, நடுநிலை பள்ளி களில் ஆயிரத்திற்கும் மேற் பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங் களில் மூத்த ஆசிரியர்கள் கூடுதல் பொறுப்பு வகிக் கின்றனர். இதனால் நிர்வா கம், கற்பித்தல் பணிகளை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாமல் ஆசிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.

மதுரை, விருதுநகர், துரத்துக்குடி, தஞ்சை, நாக பட்டினம், கிருஷ்ணகிரி உட்பட 24 கல்வி மாவட் டங்களில் டி.இ.ஓ.,க்கள் இல்லை. இம்மாதம் கடைசியில் மேலும் டி.இ.ஓ.,க்கள் ஓய்வுபெறு கின்றனர். தேனி, திருப் பத்துார், கடலூலூர் உட் பட 6 மாவட்டங்களில் சி.இ.ஒ.,க்களும் இல்லை.

தயார் நிலையில் பதவி உயர்வு பட்டியல்

மாநில அளவில் 70 பேர் கொண்ட டி.இ.ஒ.,க்கள் பதவி உயர்வு பட்டியல் தயார் நிலையில் உள்ளது. பதவி உயர்வு அளிக்கப் பட்டால் தற்போது காலி யான டி.இ.ஓ.,க்கள் பணி யிடங்கள் நிரப்பப்படும். இதற்கான நடவடிக் கையை இயக்குநர்கள் கண்ணப்பன், எடுக்க வேண்டும்.

நரேஷ் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கள் சங்க மாநிலத் தலைவர் அன்பரசன் கூறியதாவது: வழக்குகள் காரணமாக தலைமையாசிரியர் பணி யிடங்கள் அதிக எண் ணிக்கையில் காலியாக உள்ளன. டி.இ.ஓ.,க்கள் காலியிடங்களும் அதிகரித்து வருகின்றன. ஜூலை 2 முதல் ஆசி ரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக் கவுள்ளது. அப்போது டி.இ.ஒ.. சி.இ.ஒ.க்கள் பங்கு முக்கியம். அதற் குள் டி.இ.ஒ.,க்கள் பதவி உயர்வு அளிக்க வேண் டும். சி.இ.ஒ.க்கள் பணி யிடங்களையும் நிரப்ப எடுக்க நடவடிக்கை வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.