பள்ளிக்கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வெளியீடு. School Education – Issuance of guidelines regarding the conduct of counseling for transfers, requests for transfer, and promotions for those serving in the same office or post for more than three years.
பள்ளிக்கல்வி தமிழ்நாடு பொதுப்பணி மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நிலையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் /பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து.
// மின்னஞ்சல் மூலமாக //
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகள், சென்னை 06
ந.க.எண். 030153/அ3/இ1/2026 நாள். 23.06.2026
.... பொருள் : பள்ளிக்கல்வி — தமிழ்நாடு பொதுப்பணி — மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நிலையில் —
3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பதவியில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துதல் தொடர்பாக அறிவுரைகள் வழங்குதல் . சார்ந்து.
பார்வை : 1. - — அரசாணை எண். 151 பள்ளிக்கல்வி (SE1 (1) துறை நாள். 09.09.2022 2. அரசாணை எண். 149 பள்ளிக்கல்வி (SE5 (1) துறை நாள். 01.07.2024 பார்வை (2) இல் காணும் அரசாணையில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் / ஒரே பணியிடத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 30.06. என்ற தேதியில் ஒரே பதவியில் / ஒரே பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்களுக்கு கட்டாய மாறுதல் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நடப்பு ஆண்டில் 30.06.2026 என்ற குறிப்பான தேதியின் (Crucial Date) அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்களுக்கு கட்டாய மாறுதல், மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் ஆகியவை பின்வரும் அறிவுரைகளையும், பார்வை (2) இல் காண் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளையும் பின்பற்றி நடத்திட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
2 மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நிலையில் கலந்தாய்வு நடத்திட 30.06.2026 நிலவரப்படி காலிப் பணியிடத்தினை கணக்கில் கொள்ளப்படவேண்டும்.
ஒரே மேல் 30.06.2026 நிலவரப்படி ஆசிரியரல்லாத பணியாளர்களில் அலுவலகத்தில் / ஒரே பதவியில் மூன்றாண்டுகளுக்கு பணிபுரிந்துவருபவர்கள் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் (One District, One Excel file) தயார் செய்து 25.06.2026 க்குள் நினைவூட்டுக்கு இடமின்றி அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஓர் அலுவலகத்தில் பணிக்காலத்தினை கணக்கிடுதல் : 1. 30.06.2026 ஒரே பதவியில் மூன்றாண்டு என்ற குறிப்பிட்ட நாளினை அடிப்படையாகக் கொண்டு தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் / இயக்ககத்தில் மூன்றாண்டு காலம் ஒரே ஒரே பதவியில் பணி முடித்தவர்களின் விவரங்களை தொடர்புடைய ஆவணங்களின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட பணியாளரின் பணிப்பதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையிலும் உறுதி செய்தல் வேண்டும்.
2. மூன்று ஆண்டு கட்டாய மாறுதலுக்கு மாவட்டத்திற்குள் பதவிக்கான முன்னுரிமையை நிர்ணயம் செய்யும்போது சம்பந்தப்பட்ட நபர் தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்த நாளினை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை தயார் செய்தல் வேண்டும். 3. ஒரே பதவியில் மூன்று ஆண்டுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர் கலந்தாய்வில் பங்கு பெறாத நிலையில் அன்னாருக்கு வேறு ஒரு அலுவலகத்திற்கு நிருவாக மாறுதல் கட்டாயமாக அளிக்கப்படவேண்டும்.
4.எந்தவொரு அலுவலகப் பணியாளரும், தற்போது பணிபுரியும் பதவியில் ஒரே அலுவலகத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது, அப்பணியாளர்களுக்கு அவசியம் (Mandatory) மாறுதல் அளித்தல்வேண்டும்.
3 5.ஒரே அலுவலகத்தில் ஒரு பிரிவிலிருந்து வேறு பிரிவிற்கு மாற்றம் செய்வதை கட்டாய மாறுதலாகக் கருத இயலாது என்பதால் அதனை ஏற்க இயலாது.
6.மூன்றாண்டு பணி முடித்த அலுவலகப் பணியாளர்கள் கட்டாய மாறுதலுக்குத் தகுதியுடையவராய் உள்ள போதிலும் எதிர்வரும் பதவி உயர்வு / பணிமாறுதல் அளிக்கப்படவுள்ள முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பாராயின் (உத்தேச காலிப் பணியிட மதிப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்கள் அடிப்படையில் இவ்வியக்ககத்தால் தெரிவிக்கப்படும் குறிப்பிட்ட எண்கள் வரை உள்ளவர்கள் மட்டும்) அப்பணியாளர்கள் இம்மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தேவையில்லை.
7. மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலில் செல்வதற்கான வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அப்பணியாளர்களது பட்டியலை பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
8. மூன்று ஆண்டுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களுக்கான கலந்தாய்வுக்குப் பின்னர், ஓர் ஆண்டு பணி நிறைவு செய்த அனைத்து பணியாளர்களுக்கும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். மேலும் மனமொத்த மாறுதல் கோரும் பணியாளர்களின் விண்ணப்பங்களும் பரிசீலனை செய்து ஆணை வழங்க வேண்டும்.
9. மூன்றாண்டு பணிமுடித்த அலுவலகப் பணியாளர்கள் கட்டாய மாறுதலுக்குத் தகுதியுடையவராய் இருந்த போதிலும் ஓய்வு பெற ஓராண்டுக்குள் இருக்கும் நிலையில் கட்டாய மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தேவையில்லை.
10. முன்னுரிமை (Priority) அடிப்படையில் மாறுதல் கோரும் நபர்கள் விண்ணப்பத்தில் காரணம் குறிப்பிடும்போது அதற்குரிய சான்றிதழ்கள் (தகுதி வாய்ந்த அலுவலர்களால் அண்மையில் வழங்கப்பட்டது) முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்த்து முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு தெரியபடுத்துதல் வேண்டும்.
11. வருவாய் மாவட்ட அளவில் நடத்தப்படும் கலந்தாய்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் முன்னுரிமைப் பட்டியலை கலந்தாய்வு தேதிக்கு இரு தினங்களுக்கு முன்னதாக அனுப்பி 4 சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் ஒப்புகையை பெற்று கோப்பில் இணைத்து பராமரிக்க வேண்டும்.
3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கான முன்னுரிமை (Priority) 1. 40% சதவீத கண்பார்வையற்றவர்கள் மற்றும் 40% சதவீத மாற்றுத்திறனாளிகள். 2. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர். 3. சிறுநீரக மற்றும் மாற்றுத்திறனாளி மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி புற்றுநோயாளிகள்.
அறுவை சிகிச்சை செய்தவர்கள், 4. இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவியர். 5. விதவைகள்/மனைவியை இழந்தவர்கள்/40 வயதைக் கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள் மற்றும் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் பணியாளர்கள். 6. கணவன் / மனைவி முன்னுரிமை. விருப்ப மாறுதலுக்கு விண்ணப்பிக்க ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் நிபந்தனையில் என்ற அளிக்கப்படவேண்டியவர்கள்:- இருந்து விலக்கு
1. 40% சதவீத கண்பார்வையற்றவர்கள் மற்றும் 40% சதவீத மாற்றுத்திறனாளிகள்.
2. மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்.
3. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்.
4. கணவன் / மனைவி முன்னுரிமை.
மாறுதல் கோரும் பணியாளர்களின் பணிமூப்பு (Seniority) நிர்ணயம் செய்தல்
மாறுதல் வழங்கக் கோரும் பணியாளர்களின் பணிமூப்பு (Seniority List) பட்டியல் கலந்தாய்வு தொடங்குவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். 3 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள அலுவலகப் பணியாளர்கள் மூப்பு பட்டியல் தனியாகவும், விருப்பமாறுதல்
5 கோரும் அலுவலகப் பணியாளர்கள் மூப்பு பட்டியல் தனியாகவும் வெளியிடப்பட வேண்டும்.
நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை (Eligible Vacancy Only) கலந்தாய்விற்கு முன்னர் அனைத்து அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விருப்பத்தின் பேரிலான பொது மாறுதல் தொடர்பாக அளிக்கப்பட வேண்டிய முன்னுரிமை :
I. II. III. IV. V. 100 % Visually impaired Persons. Physically Challenged Persons (including Visually impaired) with a disability of 40% or more (bench mark disability) and who possess relevant certificate issued by the competent authority, upholding the claim. Persons having mentally ill or physically challenged children and who possess relevant certificate issued by the competent authority, upholding the claim. Persons who have undergone kidney transplantation, dialysis treatment, heart operation and those effected by cancer and brain tumour. Spouse of serving personnel of defence services. VI. Widow / widower and single women over the age of 40 and legally divorced women.
VII. Spouse employed at more than 30 Km radius from the place of work :-
If both husband and wife are employed and the distance between the places of their employment is more than or outside a 30 Km radius, their case will be considered under spouse quota and they will be treated as living in two different places. Transfer under this category will be considered only after three years of earlier transfer. (The spouse transfer category is applicable only in respect of spouse employed in School / offices under Union / State Government / Public sector Undertakings and Govt, Aided Schools. A service certificate is to be produced from the competent authority to avail the benefit) முன்னுரிமையில் (Priority) ஒன்றுக்கு மேற்பட்டோர் இருப்பின் கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறை.
அ தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியில் சேர்ந்த நாள். ஆ பணியில் சேர்ந்த நாள் ஒன்றுக்குமேற்பட்டோருக்கு ஒரே நாளாக இருப்பின் அவருடைய பிறந்த நாள்.
இ பிறந்த நாள் ஒரே நாளாக இருப்பின் பெயரின் அகர வரிசை மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் பணியாளர்கள் உள்மாவட்டம் ஆகிய இரு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்விற்கும் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்கள் உள்மாவட்டத்திற்குள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெறுபவர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் பெற்ற பணியாளர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரால் ஒப்பமிடப்பட்ட ஆணை மின்னஞ்சல் வழியாக சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
அவ்வாறு பெறப்பட்ட ஆணையில் சார்ந்த அலுவலக தலைவர் மேலோப்பமிட்டு சார்ந்த அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே மூன்றாண்டு கட்டாய மாறுதலில் வேறு அலுவலகங்களுக்குச் சென்றவர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்றாண்டுகள் பணி முடித்த பின்னரே ஏற்கனவே பணிபுரிந்த அலுவலகத்திற்கு மாறுதல் அளிக்கப்படவேண்டும்.
விருப்ப மாறுதல் மற்றும் மனமொத்த மாறுதலைப் பொறுத்தவரை பார்வை (2) இல் காணும் அரசாணை வ.எண் 3 இல் Registration of Requests for Transfer என்ற தலைப்பில் a) to h) வரை தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி விண்ணப்பங்களை பரிசீலித்து மாறுதல் வழங்கப்படவேண்டும்.
7 சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை சென்னை மாவட்டத்திலுள்ள அலுவலகங்கள் / பள்ளிகள் மற்றும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இயங்கும் பிற இயக்ககங்களில் மாவட்டக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர் நிலையில் உள்ள பணியாளர்களின் பட்டியல் பணி மூப்பு அடிப்படையில் தயாரிக்கப்பட்டு (மூன்று ஆண்டுக்கு மேற்பட்டவர்களுக்கான கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல் மற்றும் மனமொத்த மாறுதல் ஆகியவை) பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களால் கலந்தாய்வு நடத்தப்படும்.
சென்னை மாவட்டம் சார்ந்து முன்னுரிமை பட்டியல் தயாரிக்க ш Over 3 years, Willing Transfer request and District to District request Transfer சார்பான பணியாளர்களின் விவரங்களை கலந்தாய்வு நாளுக்கு இருதினங்களுக்கு முன்னதாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் பிற இயக்ககங்களிலிருந்து பள்ளிக் கல்வி இயக்ககத்தில் ஒப்படைக்கவேண்டும்.
வருவாய் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு முடிந்த பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை உரிய படிவத்தில் உரிய ஆதாரங்களுடன் பரிசீலித்து. நன்கு கூர்ந்தாய்வு செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரை மற்றும் கையொப்பத்துடன் பதவி வாரியாக தனித்தனியாக (உரிய இணைப்புகளுடன்) தாமதமின்றி பள்ளிக் கல்வி இயக்கக அ3 பிரிவு மின்னஞ்சலுக்கு a3sec.tndse@gmail.com அனுப்புதல் வேண்டும்.
இதேபோல் வருவாய் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு முடிந்த பின்னர் பதவிவாரியாக தனித்தனி தாளில் காலிப்பணியிட விவரங்களை (Resultant Vacancy) முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் அனுப்புதல் வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நிலையில் மாவட்ட விட்டு மாவட்டம் மாறுதல் கோரி தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் ஏதுமில்லையெனில் இன்மை அறிக்கையினை மேற்காண் மின்னஞ்சலுக்கு தவறாது அனுப்புதல் வேண்டும்.
எனவே, பார்வை (2) ல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் மேற்காணும் அறிவுரைகளை பின்பற்றி மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நிலையில் வருவாய் மாவட்டத்திற்குள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் (Over 3 years Transfer, Willing Transfer Mutual Transfer) கலந்தாய்வு நடத்திடவும், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் and 8 விண்ணப்பங்களை பரிசீலிக்கத் தேவையான ஆவணங்களின் நகல்களுடன் 29.06.2026 அன்று பிற்பகல் 01.00 மணிக்குள் அ3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : 1. விருப்ப மாறுதல் மாதிரி படிவம்.
👇👇👇
CLICK HERE TO DOWNLOAD PA to DEO - Over 3 Years, Willing Transfer and Promotion - Counselling - Instructions, Schedule and Format PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.