பழைய ஓய்வூதியத்தினை முழுமையாகப் பெறுவதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடரும் - ஜாக்டோ-ஜியோ செய்தி வெளியீடு. The agitation to fully restore the old pension scheme and to fulfill the other 9 demands will continue - JACTO-GEO press release.
பழைய ஓய்வூதியத்தினைப் பெறுவதற்கான முதல்படி
பழைய ஓய்வூதியத்தினை முழுமையாகப் பெறுவதற்கும் ஏனைய 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான இயக்க நடவடிக்கைகள் தொடரும்
3 இலட்சத்திற்கும் மேலுள்ள சத்துணவுப் பணியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை மீட்டெடுக்கவும் ஜாக்டோ ஜியோ களத்தில் நிற்கும் நேற்றைய தினம் (3.12026) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்கள். அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்கள் மனம் மகிழும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட (TAPS) ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தார்கள். இந்த அறிவிப்பிற்கு ஜாக்டோ ஜியோ மனமார்ந்த நன்றியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.
நேற்றைய தினம் அறிவிப்பு வெளிவந்த உடனேயே, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் ஜாக்டோ ஜியோவுக்கு மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்தார். இந்த நல்லெண்ண நடவடிக்கை அடிப்படையில் ஜாக்டோ ஜியோ 61.2026 முதல் மேற்கொள்ளவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
14.2003 முதல் தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே நடைமுறையில் இல்லாத ஒரு ஓய்வூதியம் திட்டம் என்ற பெயரில் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை முன்னாள் முதலமைச்சர் அவர்கள் செல்வி ஜெயலலிதா நடைமுறைப்படுத்தினார். மேலும், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு அரசு உள்ளது என்பதைக் காரணம் காட்டி, ஓய்வூதியப் பலன்களை குறைக்கின்ற ஐந்து அரசாணைகளை வெளியிட்டடார். இதோடு மட்டுமல்லாமல், 2001ல் ஆட்சிக்கு வந்த உடனேயே, வேலை நியமனத் தடைச் சட்டத்தினை கொண்டு வந்து, அரசுப் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்கள் நியமனங்களை முற்றாக ஒழித்துக் கட்டினார். ஊழியர் விரோகப் போக்கிற்கு எதிராக, 2003ல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கிளர்ந்தெழுத்து, அடக்குமுறைகளை எதிர்கொண்டு, உச்சபட்ச பணிநீக்க (எஸ்மா, டெஸ்மா நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு, ஓய்வூதிய உரிமைகளை ஜாக்டோ ஜியோ மீட்டெடுத்தது.
இந்தப் போராட்டத்தில் 50 மேற்பட்ட தோழர்களை இழந்து தான் நாம் நமது உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதோடு மட்டுமல்லாமல், 2006ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், வேலை நியமனத் தடைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, 2007 முதல் அரசுப் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-அரசு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவ்வாறு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு எல்லாம் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், 1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்த்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு சல்லிக் காக கூட ஓய்வூதியமாகக் கொடுக்கப்படாத சூழ்நிலையில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு மீண்டும் ஜனவரி 4, 2017ல் உதயமாகி அவர்களை பாதுகாப்பதற்காக இயக்க நடவடிக்கைகளை, போராட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஜாக்டோ ஜியோ 2017 செப்டம்பர் மாதத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தினை அறிவித்து களம் கண்டபோது, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள், மீண்டும் ஓய்வூதியத்தினை வழங்குவதற்கு 100 சதவிகிதம் சாத்தியம் இல்லை என்பதை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் பகிரங்கமாக ஈரோட்டில் அறிவித்தார்.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO ) Press News - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.