*ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு போடுவேன் என காவலர்கள் மிரட்டல்*
_அராஜகத்தின் உச்சபட்சம்_ Police officers threaten to file marijuana cases against teachers - the height of lawlessness!!
அனைத்து போராளிகளுக்கும் என் வீரமிகு வணக்கம்.
இன்று காலை 9.45 முதல் மாலை 7.00 மணி வரை முழுவதும் காவல்துறை patrol வாகனத்தில் வைத்திருந்தார்கள்.
ஹோட்டலில் காலை உணவு உண்ட பின்பு எக்மோர் ரயில்வே வரை என்னை பின்தொடர்ந்து கிட்டத்தட்ட 25 காவலர்கள் மற்றும் 4 IS சேர்ந்து என்னை சுற்றி வளைத்தனர். அவர்கள் முதலில் நீங்கள் வாத்தியார் தானே என கேட்டனர்.
இல்லை என்று சொன்னேன்.
அதில் ஒருவர் நேற்று கோஷம் போடும் போது வாகனத்தில் இவரை தூக்கி விட்டேன் என்று கூறினார்.
பின்னர் அவர்கள் 9.45- 11.30 வரை சுமார் 2 மணி.15 நிமிடமாக எழுப்பிய வினாக்கள். பெயரைக் கேட்டனர்.
குணசேகர் என்றேன்.
முகநூலில் திமுகவை மிசா என்று குறிப்பிட்டது நீதானே என்று கேட்டனர், இல்லை என்றேன்.
1.உங்களை யார் வழி நடத்துகிறார்கள்?
2.ஃபெலிக்ஸ்க்கு கால் செய்?
3. செல்போனில் லாக்கை எடு.
4. இன்று எங்கு போராட்டம்?
அனைத்துக்கும் நான் கூறிய ஒரே விடை தெரியாது.
உன் பையில் கஞ்சாவை வைத்து வழக்குப்பதிவு என்று கூறினார்கள். நான் சிரித்துக் கொண்டே தாராளமாக செய்து கொள்ளுங்கள் என்று கூறினேன். கடுமையான கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்.
எதற்காக போராடுகிறார்கள் என்று கேட்டார்கள்.சம வேலைக்கு சம ஊதியம் என்றேன், அங்கிருந்து ஒரு ஆட்டோ டிரைவரை கூப்பிட்டு உனக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டார்கள் அவர் ஒரு நாளைக்கு 1200 என்று கூறினார். நான் கேட்டேன் ஆட்டோ டிரைவரும் நானும் ஒன்றாய் என்று.
திரும்பத் திரும்ப மொபைல் லாக்கை எடுக்க சொல்லினார்கள். என் கொள்கைக்கு மாறாகவும் என் இனத்திற்கு துரோகமும் செய்ய மாட்டேன் என்றேன். கடும் சொற்களைப் பயன்படுத்தி என்ன கொள்கை என்று கூறினார்கள்.
பின்னர் வாகனத்திற்குள் ஏற்றினார்கள் இருபுறமும் இரண்டு IS ஏறி மொபைலை லாக் எடுக்க கூறினார்கள் முடியாது என்றேன். ஒரு மணி நேரம் போராடினார்கள். பின்னர் என் கையைப் பிடித்து ஒவ்வொரு விரலாக பத்து விரலையும் தொட்டுப் பார்த்தார்கள் லாக் ஓபன் செய்யவில்லை. கடுமையான சொற்களைப் பயன்படுத்தி திட்டினார்கள், சில பேர் அன்பாக பேசி பின் நம்பரை கேட்டார்கள். எதற்கும் நான் செவிமடுக்கவில்லை. 11.30 ஆனவுடன் நமது போராட்டம் களம் அவர்களுக்கு மீடியாக்கள் மூலம் தெரிந்து விட்டது. பின்னர் என்னை தொந்தரவு செய்யவில்லை.
*இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது*
*1. நம் போராட்டம் அரசுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்துள்ளது.*
*2. யார் எப்படி திட்டமிடுகிறார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை?*
*3. உளவுத்துறை சாதாரண ஆசிரியரிடம் கூட போன் லாக்கை எடுக்க முடியவில்லை. நாம் நாம் எவ்வளவு மன உறுதியோடு உள்ளோம் என்று அவர்களுக்கு காட்டியுள்ளோம்.*
*4. எத்தனை வழக்கு பதிவு செய்தாலும் அடக்குமுறை நடத்தினாலும் இவர்கள் அஞ்ச மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரிய வைத்துள்ளோம்.
*5. தலைமை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் போராட துணிந்து விட்டார்கள் என்று அறிந்து விட்டார்கள்.*
*6. உளவுத்துறை கடுமையான தோல்வி*
*8. முகநூல் பதிவு, ட்விட்டர் பதிவு, புலனப்பதிவு அனைத்தையும் கண்காணிக்கிறார்கள்.*
*ஆகவே நம் போராட்டம் வெற்றியை நோக்கி பயணிக்கின்றது.*
*வீட்டிற்கு அனுப்பும்போது இனிமேல் நீ தனியாக வரக்கூடாது என்று கூறினார்கள். ஆகவே நாம் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் கூட்டு செல்வோம்.*
*போராட்டம் வெற்றியின் விளிம்பில் உள்ளது அனைவரும் களம் காண்போம் இறுதி வெற்றி நமதே.*
* *குறிப்பு 11.30 மொபைல் போனை எடுத்துக் கொண்டு மாலை 7 மணி அளவில் கையில் கொடுத்தனர்.*
*SSTA காணை வட்டாரம் விழுப்புரம் மாவட்டம்*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.