ஆசிரியர்களின் பணப்பலன்களில் கையாடல்: ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட வட்டார கல்வி அலுவலக உதவியாளர் கைது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 12, 2026

ஆசிரியர்களின் பணப்பலன்களில் கையாடல்: ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட வட்டார கல்வி அலுவலக உதவியாளர் கைது



ஆசிரியர்களின் பணப்பலன்களில் கையாடல்: ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட வட்டார கல்வி அலுவலக உதவியாளர் கைது Embezzlement in teachers' financial benefits: Block Education Office assistant who was suspended has been arrested.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சவுந்தரபாண்டியன். ஏற்கனவே மேலநீலிதநல்லூர் வட்டார கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி புரிந்தபோது ஆசிரியர்களின் பணப் பலன்களை கையாடல் செய்த தமிழ்நாடு இவர் தாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம் மூசா என்பவர் புகார் மனு அளித்திருந்தார். பணப்பலன்களை கையாடல் செய்த சவுந்த ரபாண்டியன் பணிபுரிந்த காலங்களை ஆய்வு செய்து அவர் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அதிகாரிக ளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். இதில் உதவியாளர் சவுந்திர பாண்டியன் ஆசிரியர்களின் பணபலன்களை கையாடல் செய்து இருப்பது ஊர்ஜிதமானது. இதைத் தொடர்ந்து உதவியாளர் சவுந்தரபாண்டியனை சஸ்பெண்டு செய்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் பணத்தை கையாடல் செய்ததாக தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில். தீவிர விசாரணைக்கு பின்னர் சவுந்தரபாண்டியனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.