100 ஆண்டைக் கடந்த 370 அரசுப் பள்ளிகளில் விழா எடுத்து கொண்டாட உத்தரவு
தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு அரசுப் பள்ளிகள் பொதுமக்களின் நம்பிக்கைக்கு உரியவையாக திகழ்கின்றன. இத்தகைய பெருமைக்குரிய அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டை கொண்டாடுவதன் வாயிலாக மாணவர்களுக்கு உத்வேகம் ஏற்படும்.
அதன்படி நடப்புக் கல்வியாண்டில் (2025-26) 370 பள்ளிகள் நூற்றாண்டை நிறைவுசெய்துள்ளன. இந்த பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவை கொண்டாட வேண்டும். இதனை ஆண்டு விழாவோடு இணைத்து கொண்டாடமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா - பள்ளி அளவில் கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. Centenary celebrations of government schools that have completed one hundred years - Guidelines issued for school-level celebrations.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை - 2026 ஆம் ஆண்டு நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா - பள்ளி அளவில் கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்-சார்ந்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாட்டில் அனைவருக்குமான கல்வியையும் சமத்துவமான கல்விச்சூழலையும் அறிவியல் பார்வையோடு உறுதி செய்வதில் நம் அரசுப் பள்ளிகளுக்கு பெரும்பங்குண்டு. குறிப்பாக நூறு ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டுவரும் நம் அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்கின்றன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஒவ்வொரு அரசுப் பள்ளியும், பல தலைமுறை மாணவர்களின் கல்வி கனவுக்கு வழிவகுத்துள்ளது. மாணவர்கள் தங்கள் பள்ளிக் காலத்தை முடித்த பின்பும் தொடர்ச்சியாக அவர்களின் பள்ளிகளோடும் ஆசிரியர்களோடும் பயணிப்பதோடு மட்டுமல்லாமல் வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் செயல்பட்டு வருகின்றனர். சிறிய கிராமங்களில் தொடங்கி உலக மேடைகள் வரை பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர் நம் அரசுப் பள்ளி மாணவர்களான முன்னாள் மாணவர்கள்!
தமிழ்நாட்டில் 2025-26 ஆம் கல்வியாண்டில், 370 பள்ளிகள் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளன. நம் பள்ளி, நம் பெருமை!" என்ற கூற்றை நிலைநிறுத்தும் வண்ணம் நூறு ஆண்டுகளைக் கடந்து நம் ஊரின் அடையாளமான நம் அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழாவை கொண்டாடி மகிழ்வோம். இத்தகையப் பெருமைக்குரிய நம் அரசுப் பள்ளிகளின் நூறு ஆண்டுக் கடந்த வரலாற்று நிகழ்வைச் சிறப்பாக கொண்டாடுவதன் வாயிலாக அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கும் பொது மக்களுக்கும் மிகுந்த நம்பிக்கையாகவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உத்வேகமாகவும், ஆசிரியர்களுக்கு உந்துதலாகவும் அமையும்.
முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து நூற்றாண்டுத் திருவிழாவை கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடிட சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
அனைத்து நூற்றாண்டுப் பள்ளிகளிலும் நூற்றாண்டுத் திருவிழாவினை முன்னால் மாணவர்கள், தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடபரித்துரைக்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் நிகழும் நூற்றாண்டுத் திருவிழாவினை புகைப்படம், காணொலி போன்ற முறைகளில் ஆவணப்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. நூற்றாண்டுத் திருவிழா: விழா ஒருங்கிணைப்புக் குழுவிற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
பள்ளி அளவில் விழா ஒருங்கிணைப்புக் குழு அமைத்தல்
தலைமை ஆசிரியழிகாட்டுதலின் படி ஆசிகள், முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சேர்த்து பள்ளி அளவில் விழா ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும்.
நூற்றாண்டுத் விழா திட்டமிடுதல் மற்றும் பகிர்தல்:
விழாவின் தேதி சிறப்பு விருந்தினர்கள் விவரம், நிகழ்ச்சி நிரல் பாதுகாப்பு எற்பாடுகள். மாணவர்கள் பங்கேற்பு ஆகியவற்றை குழுவாக இணைந்து ஆலோமித்து ஒருமித்த முடிவுடன் திட்டமிட வேண்டும்
விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் விழா ஒருங்கிணைப்புக் குழு வாயிலாக பள்ளி ஆசிரியர்கள், முன்னம மண முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் அலுவலர்கள், மற்றும் பள்ளியைச் சார்ந்த அனைவருக்கும் நூற்றாண்டு விழாக் குறித்து தெரியப்படுத்துதல் மற்றும் வரவேற்றல் விழாவுக்கு முன்பே எதிர்பார்க்கப்படுகிற விருத்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர் பட்டியலை தயார் செய்யபரிந்துரைக்கப்படுகிறது.
பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை விழாக் குழு வாயிலாக ஒருங்கிணைத்தல்.
விழாவில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தத் திட்டமிடுதல்
விழாவில் தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள். முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்தல்
இதுவரை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகள், பள்ளி மற்றும் மாணவர்கள் Quto விருதுகள், அரசு மற்றும் பள்ளியின் முன்னெடுப்புகள் குறித்து காட்சிப்படுத்துதல்.
பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழாவில் நூற்றாண்டுச் சுடர் ஏற்றுநல்
👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD 2026 - Centenary Celebration Proceeding PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.