TNPSC GROUP IV - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 3, 2025

TNPSC GROUP IV - ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

எண்.3, தேர்வாணையச் சாலை, சென்னை 600 003,

செய்தி வெளியீடு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-தொகுதி IV பணிகளில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர். மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை (26.09.2025) அன்று வெளியிடப்பட்டது. தற்போது மேலும் 645 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை இன்று (03.122025) வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆகும். 2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) மூலம் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் (வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக), ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 5101 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை மற்றும் பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் (வனக்காப்பாளர். மற்றும் வனக்காவலர் பதவிகள் நீங்கலாக) சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் (3560) ஒப்பிடும்போது. 2025-ம்ஆண்டில் கூடுதலாக 1541 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.