தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு (NMMS) உதவித் தொகைக்கான 2026 தேர்வு - 10.01.2026-ல் தேர்வு தேதி அறிவிப்பு - பள்ளி மாணவர்களின் நலன் கருதி வழக்கமாக நடைபெரும் பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடைபெறக்கோருதல் சார்பு - திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி - நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆர். சச்சிதானந்தம், M.P., அவர்கள் தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதிய கடிதம் (அரசின் கவனத்திற்கு மிக அவசரம்)
தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு (NMMS) உதவித் தொகைக்கான 2026 தேர்வு - 10.01.2026-ல் தேர்வு தேதி அறிவிப்பு - பள்ளி மாணவர்களின் நலன் கருதி வழக்கமாக நடைபெரும் பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடைபெறக்கோருதல் சார்பு பார்வை:
அரசு தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைக்கடிதம் ந.க.எண்:
013364/19 (3)/2025, : 15.12.2025
அன்புடையீர் வணக்கம்.
2025-26 ம் ஆண்டிற்கான வருவாய் வழி மற்றும் தகுதிப்படிப்பு உதவித்தொகை திட்டத் தேர்வு (NMMS). 10.01.2026 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளதாக பார்வை 1 ன் மூலமாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வானது பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறும். தற்போது அரையாண்டுத் தேர்வில் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர். விடுமுறை முடிந்து ஒரு சில தினங்களிலேயே தேர்வு என்பதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க போதுமான நாட்கள் இல்லை. இதனால் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் இத்தேர்வை எதிர்கொள்வது கடினமானதாக இருக்கும். எனவே, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி வழக்கமாக தேர்வு நடைபெறும் பிப்ரவரி மாத இறுதியில் தேர்வினை நடத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.