ஆண்டுதோறும் TET நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்த தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 21, 2025

ஆண்டுதோறும் TET நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்த தகவல்



ஆண்டுதோறும் TET நடத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை குறித்த தகவல் Information regarding the hearing of the case filed demanding that the TET exam be conducted annually.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 19.12.2025 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிகிறார்கள் என்ற RTI தகவல்கள் அடிப்படையில் NCTE Guidelines சார்ந்து ஆண்டுதோறும் ஒருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் அதனை அடுத்து பணி நியமனத்திற்கான‌ நியமனத் தேர்வையும் கட்டாயம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்த உத்தரவு இடவேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.பி.புகழேந்தி அவர்கள் வழக்கு விசாரணையை 20.01.2026க்கு ஒத்திவைத்ததுடன் பள்ளி கல்வி துறை முதன்மைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்டோர்க்குப் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு இட்டுள்ளார்கள்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.