திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஆர்வமில்லாத மாணவர்கள்!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 25, 2025

திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஆர்வமில்லாத மாணவர்கள்!!!



திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஆர்வமில்லாத மாணவர்கள்!!! Students who are not interested in skill development training!!!

தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மாணவ - மாணவியரின் திறனை மேம்படுத்த, அரசு நடத்தும் 'திறன் மேம்பாட்டு பயிற்சி'யில் ஆர்வம் காட்டாமல், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 11,302 மாணவ - மாணவியர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கூடுதல் பணிச்சுமை என்பதால், ஆசிரியர்களும் சரியாக கண்காணிக்காததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு பள்ளியில் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இந்த மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், 6 - 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பள்ளி நேரங்களில், 'திறன்' என்ற கற்றல் இடைவெளியை குறைக்கும் பயிற்சி அளிக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், கடந்த ஏப்ரல் மாதம் சட்ட சபையில் அறிவித்தார். அவதி

இதற்காக, 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த ஜூலை மாதம் முதல், மூன்று பாடங்களிலும் திறன் குறைவாக உள்ள மாணவ - மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட் டத்தில், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டங்களில், 1,336 அரசு பள்ளிகள் உள்ளன.

இதில், 462 பள்ளிகளில், 6 - 9ம் வகுப்பு வரை, 24,747 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு, ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 11,302 மாணவ - மாணவியர் பயிற்சி பெற வருவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடவடிக்கை

இது, அரசு பள்ளி மாணவ - மாணவியரின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் திறன் பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவ - மாணவியர் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம், இப் பயிற்சி வகுப்பால் பிற மாண வர்களின் கல்வியில் எவ்வித பாதிப்பும் ஏற்படா தவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:

முதலில் அரசு பள்ளி மாணவ - மாணவியரின் முழு தேர்ச்சி திட்டத்தை கைவிட வேண்டும். பின், கல்வித்துறையில் துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

காலி பணியிடங்களை நிரப் பினால், மாண வர்களின் அடிப்படை கல்வி தேவையான, தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களை எளிதாக படிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.