"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 27, 2025

"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்



O. Panneerselvam strongly condemns the DMK government for not fulfilling the demand of secondary school teachers for "equal pay for equal work".

ஓ.பன்னீர்செல்வம்

"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்

கச்சத்தீவு தாரைவார்ப்பு, காவேரி நதிநீர் பங்கீடுப் பிரச்சனை, வரிப் பகிர்வு குறைவு. பொதுப் பட்டியலில் கல்வி, நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு, மருத்துவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்காமை என பலவற்றிற்கு மூலக் காரணம் தி.மு.க. தான் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வரிசையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்காததற்கும் மூலக் காரணம் திமு.க. தான். 2009 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய விகிதம் மற்றும் படிகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டபோது, 01-06-2009 க்கு முன் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதிய விகிதமும், 01-06-2009 க்கு பின் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதிய விகிதமும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது. ஒரே கல்வித் தகுதியிருந்தும் ஊதியத்தில் மற்றும் பாகுபாடு. இதுவரை இந்தியாவில் எந்த அரசும் பின்பற்றாத ஒரு புதிய விசித்திரமான நடைமுறையை அப்போதைய தி.மு.க. அரசு கையாண்டது. 2009 ஆம் ஆண்டு 3,000 ரூபாயாக இருந்த வித்தியாசம் தற்போது 30,000 ரூபாய் அளவுக்குச் சென்றுவிட்டது. ஒவ்வொரு முறை அகவிலைப்படி அறிவிப்பு வெளியிடும்போதும் இந்த வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வித்தியாசம் இதர படிகளிலும் தொடர்கிறது.

இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு இந்தக் கோரிக்கையினை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது. இதற்கு ஆதரவு தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பக்கம் 83, வரிசை எண் 311-ல் "ரூ. 8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய 20,000 ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊதியம் வழங்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"சம வேலைக்கு சம ஊறியம்" குறித்து பலமுறை அரசு அரசு பேச்சுவார்த்தை த்தை நட நடத்தியும், இதற்கென தனிக் குழுவை அமைத்தும், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் 14-க்கு முரணான செயல் ஆகும். ஆட்சியில் அமருவதற்காக இடைநிலை ஆசிரியர்களுக்கு வாக்குறுதி அளித்த தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அவர்களின் நியாயமான கோரிக்கையினை தட்டிக் கழிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இது ஒரு ஏமாற்று வேலை. நான்கு இலட்சம் கோடி ரூபாய்க்கு வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் தமிழ்நாடு அரசால் வெறும் 500 கோடி ரூபாய் செலவு ஏற்படும் இடைநிலை ஆசிரியர்களின் சட்டப்பூர்வமான கோரிக்கையை நிறைவேற்ற மனமில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கும் செயல். தி.மு.க. ஆட்சியின் பதவிக் காலமே முடிவுக்கு வருகின்ற சூழ்நிலையில், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினை உணர்ந்து, அவர்களை அழைத்துப் பேசி, தி.மு.க. ஆட்சியின் பதவிக் காலம் முடிவு அடைவதற்குள் அடைவதற்குள் அதனை அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல் டுக்காமல் அல அவர்கள்மீது கைது நடவடிக்கையினை மேற்கொண்டு இருப்பது அடக்குமுறையின் உச்சகட்டம். வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை கடமையாக கருதாமல், காவல் துறை மூலம் அவர்களை ஒடுக்க நினைப்பது முறையற்ற செயல். ஒரு வேளை இதற்கு பெயர்தான் திராவிட தான் திராவிட மாடல் போலும்,

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினைக் கருத்தில் கொண்டும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியினை நினைவில் கொண்டும், "சம வேலைக்கு சம ஊதியம்" என்பது அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமை என்பதைக் கருத்தில் கொண்டும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்ற முன்வா வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.