பழைய ஓய்வூதிய திட்டம் - ஆசிரியர்களுக்கு பாடம் நடத்திய செவிலிய சகோதரிகள்
ஆசிரியர்களுக்கு *பாடம் நடத்திய செவிலிய சகோதரிகள்*
குறிப்பாக
பெண் ஆசிரிய சகோதரிகள் இதை *கண்டிப்பாக படியுங்கள்*
*நீங்கள் களம் இறங்கினால் மட்டுமே*
பழைய ஓய்வூதிய திட்டத்தை பெற முடியும்.
உறுதியோடு போராடிய செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது. இரவு பகல் பாராது
கடும் பனிப்பொழிவில்
7 நாட்களாக தொடர் போராட்டத்தை
செய்து ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர்
செவிலிய சகோதரிகள். 1.7 நாட்களாக போராட்டம் நடைபெற்ற நாட்களை வேலை நாட்களாக கருதி சம்பளப் பிடித்தம் செய்யப்பட மாட்டாது, மேலும் செவிலியர்கள் மீது எந்த துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது.
2. முதற்கட்டமாக வரும் பொங்கலுக்குள் ஆயிரம் செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.
3. 37 Critical Care units தமிழகம் முழுவதும் செயல்பட இருப்பதால் அதில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.
4. அடுத்த வாரம் சங்க நிர்வாகிகளை அழைத்து புதிய பணியிடங்கள் உருவாக்குவதற்கு ஆலோசனை செய்து 8000 செவிலியர்களையும் நிரந்தரம் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
5. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டு வழங்கப்படும்
6. பணியில் இருந்து நீக்கப்பட்ட கோவிட் செவிலியர்கள் பொங்கலுக்குள் மீண்டும் பணி நியமனம் பெறுவார்கள்
*பெண் ஆசிரிய சகோதரிகளே உங்களை இரவு பகலாக சாலையில் அமர சொல்லி போராட அழைக்கவில்லை* .
இரண்டே இரண்டு போராட்டம்:-
📌 *டிசம்பர் 29 அன்று மாலை நேர ஆர்பாட்டம்.*
🏃🏼♀️மாலை 5:00 மணிக்கு வந்து கலந்துக் கொண்டு மாலை 6:00 மணிக்கு வீட்டிற்கு திரும்பி விடுங்கள்.
📌 ஜனவரி 6 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம்.
🏡*எந்தவித அச்சமும் இன்றி துணிந்து ஒரே ஒரு வாரம் மட்டுமே நீங்கள் வீட்டிலேயே இருந்து விட்டால்*
அவ்வளவு தான் நமது போராட்டம்.
*பழைய ஓய்வூதிய திட்டத்தை பெற்று விடலாம்.*
ஆனால்
நமது ஆசிரியர்கள் போராட்ட களத்திற்கு
அழைப்பு விடாமல்
கீழ் கண்ட இரண்டு வகையான பதிவுகளை பகிரும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். 1) அரசுக்கு ஆதரவான தலைவர்களை கொண்ட சங்க உறுப்பினர்களுக்கு வருகின்ற தகவலை தெரிந்தோ தெரியாமலோ *போராட்டம் எழுச்சி அடையாமல் இருக்க* பழைய ஓய்வூதிய திட்டம் இதோ புத்தாண்டில் வருகிறது , பொங்கல் பரிசாக வருகிறது போன்ற பதிவுகளை பரப்புகிறார்கள் , நம்புகிறார்கள்.
2) போராட பயந்து அரசே தானாகவே வழங்கிவிடும் என அச்சப்படும் ஆசிரியர்களும் இதே போன்ற பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.
*இரண்டுமே தவறானது.*
செவிலியர்களைப் போன்று கடுமையான போராட்டத்தை செய்தால் மட்டுமே நமக்கு பழைய ஓய்வுதிய திட்டம் கிடைக்கும்.
*ஆண் ஆசிரியர்களே*
உங்கள் பள்ளி பெண் ஆசிரிய சகோதரிகளுக்கு
*நீங்கள் முன் மாதிரியாக*
போராட்டம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அழைத்து வாருங்கள்.
- மாவட்ட அமைப்பு
TNHSPGTA- CHENGALPET.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.