"பசுமைத்திட்டம்" இயக்கம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் "Green Initiative" movement - Proceedings of the Director of Elementary Education
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு எதிராகப் பள்ளி மாணவர்களிடம், விழிப்புணர்வினைத் தூண்டும் வகையிலும், இளமையிலேயே மாணவப் பருவத்தில் இயற்கையினை நேசித்து அவற்றைப் பாதுகாக்கும் உணர்வினைத் தூண்டுவதற்காகவும், நம் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள "பசுமைத்திட்டம்" எனும் இயக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்கண்ட திட்டத்தின்படி, இணைக்கப்பட்டுள்ள இரண்டு படிவங்களில், பள்ளிகளிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், பள்ளிகளில் பசுமைப்பரப்பினை அதிகரித்தல், உயிரிய பல்வகைத் தன்மையின் முக்கியத்துவத்தினை மாணவர்கள் அறியச்செய்தல், பள்ளிவளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, செங்குத்து நிலைத்தோட்டம் (Vertical Garden). சூரியமின்தகடு (Solar Panel) அமைப்பு, குறுங்காடு அமைத்தல் (மியாவாக்கி காடுகள்), காய்கறி மூலிகைத் தோட்டம் போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுச் செயல்பாடுகள் அனைத்துப் பள்ளிகளிலும் தொடங்கப்பட உள்ளது.
A new "Green Scheme" initiative is being launched in all government and government-aided primary and middle schools in the state to raise environmental awareness among students and encourage them to protect nature from an early age.
The scheme will involve various eco-friendly activities in schools based on information gathered from two attached forms.
The scheme aims to increase green cover and educate students on the importance of biodiversity.
Activities include installing rainwater harvesting systems, vertical gardens, and solar panels.
Schools will also be encouraged to create mini-forests (Miyawaki forests) and vegetable/herb gardens.
The initiative seeks to instill a sense of environmental responsibility in students from a young age பள்ளியில் பயிலும் ஒவ்வொரு வணவரும், வராகத்தில்க வேண்டு வணகத்தின் இடவசதிக்கேற்ப மாணவர்கள் தம் வீடுகள் பொது இடங்களிலும் மரக்கன்று நடுவது மிக முக்கிய செயல்பாடு தும்.
குறிப்பாக பிறந்த நாளிலோ அல்லது பெற்றோர்.
ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பிறந்த நாளியோ மரக்கன்றுகள் மேற்கண்ட மரக்கன்று நடுதல் நிகழ்வினைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.
2. பள்ளி வளாக உயிரிய பங்கைத்தன்மையை வர்கள் அறிகல் வளாகத்தில் உள்ள மரங்களின் உள்ளூர் பெயர் மற்றும் தாவரவியல் (Botanical Name) அறித்து அதனைப் பள்ளி வளாகத்தில் அறிவிப்பும் பலகையில் குறிக்க வேண்டும்
வளாகத்தில் வருகை தரக்கூடிய பறவைகள் மற்றும் சிறு விலங்குகள் பற்றிய முக்கியத் தகவல்களை (உள்ளூர் பெயர். விலங்கியல் பெயர். தோராய எண்ணிக்)ைணவர்கள் அறியச்செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட செயல்பாட்டிற்கு மாணவர்களை ஊக்குவிக்க அருகிலுள்ள கல்லூரிப் பேராசிரியர், வல்லுநர், அறிவியல் ஆய்வாளர் ஒருவரை பள்ளிக்கு அழைத்து மாணர்களுக்குப் பயிற்சி தர (அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டும்) ஏற்பாடு செய்யலாம்.
3. குறுங்காடு அமைத்தல் (மியாவாக்கி காடுகள்)
பள்ளிகளில் குறைந்த பட்சம் 500 சதுர அடி காலியான நிலப்பரப்பு இருப்பின் அதில் 2 அடி நீள அகலத்தில் மரக்கன்றுகளை (பெரிய மரங்கள், சிறிய மரங்கள், குறு மரங்கள்) தேர்ந்தெடுத்து நட வேண்டும்.
ஆனால் அரசமரம், ஆலமரம், வேம்பு, மா. காட்டு வாகை, பனை, தென்னை ஆகிய மரங்கன்றுகளை குறுங்காடுகள் அமைப்பில் தவிர்க்கவும். 4. பசுமை இயக்கங்கள்-
பசுமைப்பரப்பை பள்ளி வளாகங்களில் அதிகரிப்பது, மரக்கன்றுநடுவது, பராமரிப்பது ஆகியவற்றில் மாணவர்கள் தாமே இயற்கை ஆர்வத்துடன் மேற்கொள்ள பள்ளியளவில் சுற்றுச்சூழல் மன்றங்களை / குழுக்களைச் செயல்படுத்த வேண்டும். இதற்கு பொறுப்பாசிரியர் நியமிக்கப்படலாம். மேற்கண்ட செயல்பாடுகளை, விரைவாக பள்ளிகளில் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை தொடர்வது.
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவான மாநிலம் முழுவதும் பசுமைப்பரப்பினை 33 சதவீதமாக உயர்த்தும் முயற்சியின் அடிப்படையில் உருவானது ஆகும். எனவே, இணைக்கப்பட்டுள்ள இரண்டு படிவங்களிலும் பள்ளிகளிலிருந்து "பசுமைத்திட்டம்" தகவல்களை உடனடியாக பூர்த்தி செய்து இவ்வியக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
அனைத்து மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களும். தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளிலிருந்து தகவல்களையும், புள்ளி விவரங்களையும் பெற்றுத்தர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தங்களிடமிருந்து பெறப்படும் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, பசுமைப்பரப்பை அதிகரிக்க திட்டமிட வேண்டி உள்ளதால், இதுகுறித்து உடனடியாக தனிக்கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு- படிவம் 1 மற்றும் 2
CLICK HERE TO DOWNLOAD "பசுமைத்திட்டம்" இயக்கம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.