கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டின் வாக்காளர் விவரங்களை கண்டறிய இணையதள வசதி - தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Tamil Nadu Election Commission announces online facility to find voter details for the years 2002 and 2005
கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டின்
வாக்காளர் விவரங்களை கண்டறிய இணையதள வசதி
கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டின் முந்தைய வாக்காளர் விவரங்களை கண்டறியும் வகையில் இணையதள வசதி செயல்படுத்தப்பட்டுள் ளது என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக ளின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளி லும் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ் வொரு சட்டமன்ற தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக் கீட்டு படிவங்களை நேரடியாக வழங்கி வருகின்றனர். முந்தைய தீவிர திருத்தத் தின் வாக்காளர் விவரங்களை எளிதாக
தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கண்டறிய வசதியாக இணையதள தேடல் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.elections.tn.gov.in/
-ல் தீவிர திருத் தம் 2002/2005 வாக்காளர் பட்டியலின் விவரங்கள் பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் உள்ளிடப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்களது பெயர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இத்தளத்தில் தங்கள் விவரங்களை தேடி கண்டறிய லாம். இவ்வசதி, நடைமுறையிலிருக்கும் சிறப்பு தீவிர திருத்தத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பங்கேற்க உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழ்நாடு தேர்தல் ஆணை யம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
Sunday, November 9, 2025
New
voter details for the years 2002 and 2005 - கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டின் வாக்காளர் விவரங்களை கண்டறிய இணையதள வசதி - தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.