'டெட்' தேர்ச்சி கட்டாயம் மத்திய அரசு தலையிடணும்
கோவை, நவ. 10-
உள்ள பணியில் அனைத்து ஆசிரியர்களும், கட்டாயமாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும் என்ற, உச்சநீதிமன்றத் தின் சமீபத்திய தீர்ப்பை தொடர்ந்து, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என, அனைத்திந்திய தேசிய ஆசிரியர் மஹாசங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்க உறுப்பினர்கள் கூறியதாவது:
தேசிய ஆசிரியர் கல் விக் குழுமம், 23.08.2010 அன்று வெளியிட்ட அறி விப்பில், குழந்தைகளுக் கான இலவச மற்றும் கட் டாயக் கல்வி உரிமைச் குறிப்பிடப்பட்டது. சட்டம்-2009 (ஆர்.டி.இ.,) படி, வகுப்பு 1 முதல் 8 வரை ஆசிரியராக நிய மிக்கப்படுவதற்கு, டெட் தேர்ச்சி பெற்றிருப்பது, குறைந்தபட்ச தகுதியாக ஆனால், சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு, கல்வி மற் றும் தொழில்முறை தகுதி களுடன் நியமிக்கப்பட்ட அனுபவமுள்ள ஆசிரியர் களையும் பாதிக்கும் வகை யில் உள்ளது.
இதனால், நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் ஆசிரியர்களின் சேவை கேள்விக்குறியாகி உள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் குழந்தைகள் கல்வி உரி மைச் சட்டத்தை, தனித் தனியாக ஏற்றுக்கொண்ட தால், அந்த மாநில அரசிதழ் அறிவித்த தேதியே, டெட் தேர்ச்சி கட்டாயத் தகுதிக் கான, 'கட் ஆப்' தேதியாக கருதப்பட வேண்டும். இல் லையெனில், ஆயிரக்கணக் கான ஆசிரியர்கள் பணி நீக் கம் அல்லது பதவி உயர்வு தடை போன்ற பிரச்னை களை சந்திக்க நேரிடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.