தமிழகத்தில் எந்தெந்த பட்டம் என்னென்ன படிப்புக்கு இணையானது?
உயர் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எந்தெந்த பட்டம், என்னென்ன படிப்புக்கு இணையானது என்பது தொடர்பாக உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் உயர் கல்வித் துறை செயலர் சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்:
பி.காம் பட்டம் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.காம் இ-காமர்ஸ், பி.காம் பிசினஸ் அனலிட்டிக்ஸ், பி.காம் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புகள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நோக்கில் பி.காம் படிப்புக்கு சமமானது.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் அக்கவுண்டிங் மற்றும் ஃபைனான்ஸ் படிப்பு, டெல்லி பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் ஆனர்ஸ் படிப்பு, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பி.காம் கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிப்பு ஆகியவை பி.காம் படிப்புக்கு இணையானவை. சென்னை எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படு்ம பி.எட் (விருப்ப பாடம்- வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல்) படிப்பானது பி.எட் (வணிகவியல் விருப்பப்பாடம்) படிப்புக்கு இணையானது. அதேபோல், காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி விஸ்வ வித்யாலயா வழங்கும் பி.எட் (விருப்ப பாடம் - ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பு பி.எட் (விருப்பப் பாடம் - ஆங்கிலம்) படிப்புக்கு சமமானது.
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் மேலாண்மை முதுகலை டிப்ளமா படிப்பு, எம்.பி.ஏ படிப்புக்கு இணையானது. அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்.சி எலெக்ட்ரானிக் மீடியா படிப்பு, எம்.ஏ ஜேனர்லிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் பட்டத்துக்கு சமமானது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி பயோ-ஸ்டேடிஸ்டிக்ஸ் படிப்பு எம்எஸ்சி ஸ்டேடிஸ்டிக்ஸ் படிப்புக்கு இணையானது.
சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியால் (தன்னாட்சி அந்தஸ்து) வழங்கப்படும் பி.எஸ்.சி ஹோம் சயின்ஸ் (நியூட்ரிஷன், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் மற்றும் டயட்டிக்ஸ் பட்டம் பி.எஸ்.சி ஃபுட் சயின்ஸ் மற்றும் நியூட்ரிஷன் படிப்புக்கு சமம்.
அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் டெக்னாலஜி படிப்பு எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு இணையானது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்.எஸ்.சி கம்யூனிகேஷன் மற்றும் ஜேர்னலிசம் படிப்பானது எம்எஸ்சி எலெக்ட்ரானிக் மீடியா படிப்புக்கு இணையானது. சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்.சி கவுன்சிலிங் சைக்காலஜி படிப்பு எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்புக்கு இணையானது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் வழங்கும் டிப்ளமா இன் ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் டிப்ளமா இன் ஃபைன் ஆர்ட்ஸ் படிப்புக்கு சமமானது ஆகும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது
2 Government Orders issued granting equivalence to various degree courses! - பல்வேறு பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை (Equivalence) வழங்கி 2 அரசாணைகள் வெளியீடு!
Public Services - Equivalence of Degrees Equivalence of Degrees offe various Universities / Educational Institutions to the similar Degrees Recommendations of 34th Equivalence Committee - Approved - Orders - Issued.
1. G.O. (Ms) No.93, Higher Education (K2) Department, Dated 30.05.2019.
G.O.(Ms).No.33, Higher Education (K1) Department, Dated 15.02.2021. G.O.(Ms).No.111, Higher Education (K1) Department, Dated 24.06.2024. 4. From the Member-Secretary, Tamil Nadu State Council for Higher Education, Letter Rc. No. 2539/ 2025 A, Dated 19.08.2025. ORDER:-
In the letter third read above, the Member Secretary, Tamil Nadu State Council for Higher Education, has forwarded the resolutions passed in the 34th Equivalence Committee meeting held on 07.08.2025 under the Chairmanship of the Secretary to Government, Higher Education Department, on the Equivalence of Degrees offered by various Universities / Educational Institutions to the similar Degrees for the purpose of employment in Public Services.
2. The Government, after careful consideration, approve the following resolutions passed in the 34th Equivalence Committee meeting held on 07.08.2025, under the Chairmanship of the Secretary to Government, Higher Education. Department and direct that the following degrees offered by various Universities / Educational Institutions be equivalent to the similar degrees mentioned therein from the date of issuance of such degrees:-
G.O.Ms.No.211 & 232 - Equivalent
👇👇👇
CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.211 & 232 - Equivalent PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.