பள்ளிகளில் டிச.10 முதல் 23 வரை அரையாண்டுத் தேர்வு . டிச.24 முதல் ஜன. 4 வரை விடுமுறை.
தமிழகத்தில் 10 முதல் பிளஸ் - 2 வரையிலான வகுப்புகளுக்கு அரையாண்டுத்தேர்வு டிச. 10-இல் தொடங்குகிறது. மற்ற வகுப்புகளுக்கு டிச.15-இல் தேர்வுகள் தொடங்கி, டிச.23-இல் முடி வடைகிறது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விடுமுறைக்குப் பின்னர் ஜன. 5- ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அரையாண் டுத் தேர்வு (இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு) காலஅட்ட வணை 2025-26 வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது:
தமிழக அரசு பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தைப் பின்பற்றும் அனைத்துவித பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.10 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
இதில் 10,11,12-ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் டிச.10-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி முடிவடையும். 10- ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், விருப்ப மொழிகள் போன்ற பாடங்களுக்கு வரிசையாக காலையில் அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெறவுள்ளன. மற்ற வகுப்புகளில் பிளஸ் -1 வகுப்புகளுக்கு பிற்பகலிலும், பிளஸ்-2 வகுப்புகளுக்கு காலையிலும் மேற்கண்ட தேதிகளில் தேர்வுகள் நடைபெறும். நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு டிச.15-ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி 23 - ஆம் தேதி முடிவடைகிறது. இதில் 1, 3, 5, 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு முற்பகலிலும், 2,4, 7, 9 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலிலும் தேர்வுகள் நடைபெறும்.
இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், விருப்ப மொழிகள் மற்ற பாடங்கள் என அடுத்தடுத்து நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் முடிந்து தொடர்ந்து அனைத்து வகுப்புகளுக்கும் டிச. 24 முதல் ஜன. 4 வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும்.
விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 5-இல் திறக்கப்ப டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரை யாண்டு தேர்வுகள் நடை பெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
6 முதல் 9-ம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையும், பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம் பர் 10-ம் தேதி தேர்வுகள் தொடங்கி 23-ம் தேதி வரை யும் நடைபெறுகிறது. 24-ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.
6 முதல் 9ம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ந்தேதி தொடங்கி 23ந்தேதி வரையும், பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பிற்கு டிசம்பர் 10ந்தேதி தேர்வுகள் தொடங்கி 23ந்தேதி வரையும் நடைபெறுகிறது.
24ந்தேதி முதல் அரை யாண்டு விடுமுறை தொடங் குகிறது.
6 முதல் 9ம் வகுப்பு வரை டிசம்பர் 15-தமிழ்மொழி டிசம்பர் 16-ஆங்கிலம் டிசம்பர் 17-விருப்ப மொழி டிசம்பர் 18- கணிதம் டிசம்பர் 19 -உடற்கல்வி
டிசம்பர் 22- அறிவியல் டிசம்பர் 23 சமூக அறிவியல் 10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை டிசம்பர் 10- தமிழ்மொழி டிசம்பர் 12 -ஆங்கிலம் டிசம்பர் 15- கணிதம் டிசம்பர் 18 - அறிவியல் டிசம்பர் 22-சமூக அறிவியல் டிசம்பர் 23-விருப்ப மொழி 11ஆம் வகுப்புகளுக்கான
தேர்வு அட்டவணை டிசம்பர் 10-தமிழ் டிசம்பர் 12 -ஆங்கிலம் டிசம்பர் 15- இயற்பியல், பொருளாதாரம் டிசம்பர் 19- வேதியியல்,
டிசம்பர் 17- கணிதம், விலங்கியல், வர்த்தகம்
கணக்குப்பதிவியல், புவியியல் டிசம்பர் 19- இயற்பியல், பொருளாதாரம்
டிசம்பர் 22- உயிரியல், தாவரவியல், வரலாறு
டிசம்பர் 23- கணினி அறிவியல்"
அரையாண்டுத் தேர்வு டிச.10-ல் தொடக்கம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு - Half-yearly exams to begin on Dec. 10: Tamil Nadu School Education Department announcement
பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 10-ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு விவரம்; தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 10 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு டிச. 10-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு டிச.15-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும். இதற்குரிய பாடவாரியான கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான தேர்வு டிசம்பர் 15-ல் தொடங்கி 23-ம் தேதி வரை முடிவடையும். தேர்வுகள் காலை, மதியம் என வேளைகளில் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ல் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
6 To 12th Half - Yearly - Exam time table - December - 2025
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF
SA Term 2 time table class 1-5-AY 25-26
👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.