G.O 80 - நிதியுதவி பள்ளிகளில் தையல்/இசை ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டவை - நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை G.O 80 - Appointments made for Tailoring/Music Teachers in Aided Schools - Publication of Guidelines - Order
அரசு தொடக்கக்கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் நிதியுதவிபெறும் பள்ளிகளில் 12.07.2002-க்கு பின்னர் தையல்/இசை ஆசிரியர் பணியிடம் நீங்கலாக இதர சிறப்பாசிரியர் பணியிடங்களில் தையல்/இசை ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டவை தொடர்பாக நெறிமுறைகள் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது.
G.O(1d)No.80, Dt.03.07.2025 - PVI NOT APPOINTED 310-EE2(1)-2025
சுருக்கம்
பள்ளிக்கல்வி தொடக்கக்கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 12.07.2002-க்கு பின்னர் தையல்/இசை ஆசிரியர் பணியிடம் நீங்கலாக இதர சிறப்பாசிரியர் பணியிடங்களில் தையல்/இசை ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டவை தொடர்பாக நெறிமுறைகள் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வி (தொ.க.2(1))த் துறை
அரசாணை (1D) எண்.90
बी. 03.07.2025
திருவள்ளுவராண்டு-2056
விசுவாவசு வருடம், ஆனி 19
படிக்கப்பட்ட
அரசாணை (நிலை) எண்:132. பள்ளிக்கல்வி(எம்.1)த் துறை, நாள். 27.04.1998.
2. அரசாணை (நிலை)எண்.104. பள்ளிக்கல்வி(1)த்துறை. 12.07.2002
3. அரசாணை (நிலை)எண்.39, பள்ளிக்கல்வி(டி 1)த்துறை. gdr.21.03.2003.
4 தொடக்கக் கல்வி இயக்குநரின் அடித 55024144/श्री//2024, 27.12.2024,
5. அரசாணை(எண்.62. பள்ளிக் கல்வி(தொ.க2(1)) துறை, நாள்.05.06.2025.
5. அரசாணை(டி. 79, பள்னிக் கல்வி(தொ.க2(1))த் துறை, நாள்.03.07.2025. பள்ளிக்கல்வித் துறையில் சிறப்பாசிரியர் நியமனங்களுக்கு நடைமுறையில் இருந்த தடையை நீக்கி 250 மாணவிகளுக்கு மேல் பயிலும் பள்ளிகளிலுள்ள தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதியும். இந்த அனுமதி மற்ற சிறப்பாசிரியர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்து மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களை உரிய வழிமுறைகளை பின்பற்றி நிரப்பிக்கொள்ள அனுமதி அளித்து மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணைக்கு தெளிவுரைகள் வழங்கி வெளியிடப்பட்ட மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 12.07.2002-க்குப் பிறகு தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்கை மட்டுமே நிரப்பிடவும்.
வேறெந்த சிறப்பு ஆசிரியர்/கைத்தொழில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பக் கூடாது எனவும். தையல் ஆசிரியர் பணியிடத்தினை இசை ஆசிரியர் பணியிடமாகவும், இசை ஆசிரியர் பணியிடத்தினை தையல் ஆசிரியர் பணியிடமாகவும் மாற்றம் செய்து கொள்ள அனுமதித்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2. மேற்கண்ட அரசாணைகளுக்கு முரணாக சிறப்பாசிரியர் பணியிடங்களில் பள்ளி நிர்வாகங்களால் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு. அவ்வாசிரியர்களுக்கு பணிநியமன ஒப்புதல் வழங்குதல் சார்ந்து, சார்ந்த பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் சாரிந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டக் கல்லி அலுவலர்களால் நிராகரிக்கப்பட்ட ஆணைகளை எதிர்த்து சார்ந்த ஆசிரியர்களால் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்ற ஆணைகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. 3 இவ்வாறு அரசு ஆணைகளுக்கு முரணாக செய்யப்பட்ட நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்குவதை முற்றிலும் தவிர்க்கும்பொருட்டு, இந்நேர்வு தொடர்பாக அரசால் விரிவாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர் கீழ்க்கண்ட ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
12.07.2002-க்கு பின்னர். நிரப்பட்ட தையல்/ இசை ஆசிரியர் பணியிடம் நீங்கலாக இதர கைத்தொழில் ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட தையல்/இசை ஆசிரியர் நியமனங்கள் செல்லத்தக்கதல்ல.
அரசாணை (நிலை) எண்.104. பள்ளிக்கல்வித் துறை. நாள்.12.07.2002-ன்படி 12.07.2002 முடிய நியமனம் செய்யப்பட்டு தற்போது பணியில் இருக்கும் தையல்/ இசை மற்றும் இதர கைத்தொழில்/ சிறப்பு ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு தனியர்கள் பணியில் இருக்கும் வரை அல்லது ஓய்வு பெறும் நான் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அப்பணியிடங்கள் நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாக (VanishingPost) கருதப்படும். அதாவது, தனியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற/ பணிவிலகல்/ பணியின் போது இறந்த நாளுக்கு மறுநாள் இப்பணியிடங்கள் தானகவே இல்லாமல் போய்விடும்/ஒழிந்து போய்விடும்.
4 மேலும், அரசுப் பள்ளிகளில் உள்ள தையல் மற்றும் இசை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பி கொள்ளவதற்கான நடையை நீக்கி வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.132. பள்ளிக் கல்வித் துறை. நாள்.2704.1998 மற்றும் மேற்காண் அரசாணையை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்து வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்.104. பள்ளிக்கல்வித் துறை, நாள்:12.07.2002 ஆகியவற்றை இதன் மூலம் இரத்து செய்தும் அரசு ஆணையிடுகிறது.
Click Here to Download - G.O 80 - நிதியுதவி பள்ளிகளில் தையல்/இசை ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டவை - நெறிமுறைகள் வெளியிடுதல் - ஆணை -
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.