திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண் 5416/ஆ4/2025
06.11.2025
பொருள்
பள்ளிக்கல்வி - திருப்பூர் மாவட்டம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் 08.11.2025 (சனிக்கிழமை) முழு வேலை நாளாக (WORKING DAY) செயல்படுதல் சார்பு பார்வை
திருப்பூர், முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரை நாள் 05.11.2025
பார்வையில் காண் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரையின்படி திருப்பூர் மாவட்டத்தில் 22.10.2025 அன்று மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை ஈடுசெய்யும் பொருட்டு 08:11.2025 (சனிக்கிழமை) அன்று அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்.
திருப்பூர்.
பெறுநர்
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள். திருப்பூர் மாவட்டம்.
நகல்:
1. மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை ) / (தனியார் பள்ளிகள்)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.