schools are struggling because they don't have money - கலைநிகழ்ச்சி நடத்த பணம் இல்லை - தவிக்கும் அரசு பள்ளிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 29, 2025

schools are struggling because they don't have money - கலைநிகழ்ச்சி நடத்த பணம் இல்லை - தவிக்கும் அரசு பள்ளிகள்

கலைநிகழ்ச்சி நடத்த பணம் இல்லை தவிக்கும் அரசு பள்ளிகள் Government schools are struggling because they don't have money to hold art performances

கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற் கும், அரசு பள்ளி மாண வர்களுக்கு உதவ, பள்ளி களுக்கு அரசு தனி நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் கலைத்தி றமைகளை ஊக்குவிக்க, கடந்த மூன்று ஆண்டு களாக கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இதில், இலக்கிய நாடகம், நாட் டுப்புற நடனம், ஓவியம் உள்ளிட்ட, 34க்கும் மேற் பட்ட பிரிவுகளில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படு கின்றன. இந்த போட்டிகளை நடத்த அரசு நிதி ஒதுக்கி னாலும், போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்வதற்கான செலவு களை, ஆசிரியர்களும் மாணவர்களுமே ஏற்க வேண்டியுள்ளது.

நடனம், நாடகம் போன்ற பிரிவுகளில் பங்கேற்கும் மாணவர்க ளுக்கான உடை, சிகை அலங்காரம், மற்றும் போட்டிக்கு தேவையான இதர பொருட்களுக்கான செலவுகள் அனைத்தை யும் ஆசிரியர்களும், மாணவர்களுமே ஏற்க வேண்டியுள்ளது.

ஆசிரியர்கள் கூறுகையில், 'கட்டைக்கால் நடனம், இலக்கியம், நாடகம் போன்ற போட் டிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் பொருட் கள், உடை ஆகிய வற்றுக்கு குறைந்தது 10,000 ரூபாய் வரை செலவாகிறது.

'அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்க ளால், இந்த செலவுகளை ஏற்க முடிவதில்லை. இதனால் திறமையிருந் தும், பங்கேற்பதை தவிர்க் கின்றனர்' என்றனர். மாணவர்களை மாவட்ட, மாநில அள விலான போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் போக்குவரத்து செலவு களையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களே பகிர்ந்து கொள்ளும் நிலை உள்ளது.

எனவே, போட்டி களில் பங்கேற்கும் மாணவர்களுக்கான செல வுகளுக்காக, அரசு பள் ளிகளுக்கு தனியாக ஒரு தொகையை, அரசு ஒதுக்க வேண்டும் என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.