Central Government Scholarship 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான மத்திய அரசின் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2025 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 29, 2025

Central Government Scholarship 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான மத்திய அரசின் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2025



2025-2026ம் கல்வி ஆண்டுக்கான மத்திய அரசின் உதவித்தொகை - விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2025 Central Government Scholarship for the Academic Year 2025-2026 - Last date to apply is 31.10.2025

மத்திய அரசின் தொழிலாளர். மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் 1ம் வகுப்பு முதல் தொழில்முறைப் படிப்புகள் வரை பயிலும் பிள்ளைகள் 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மின்னணு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1ஆம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ/டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://scholarships.gov.in/Students என்ற இணையதள முகவரியில் ஒரு முறை பதிவாக (OTR) விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளிகள் https://scholarships. gov.in என்ற இணையதளத்தில் கல்வி நிறுவனத்தின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பெயரில் வங்கக் கணக்கு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். வருமான சான்றிதழ்-பீடி மற்றும் சுண்ணாம்புக்கல் தொழிலாளர்கள் 1,20,000 ரூபாய், சினிமா தொழிலாளர்களுக்கு 96,000 ரூபாய்க்கான வருமான சான்றிதழையும் இணைக்க வேண்டும். பள்ளிகள் https://scholarships.gov.in/Students என்ற இணையதளத்தில் கல்வி நிறுவனத்தின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பங்களைச் சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

எனவே, புதிதாக விண்ணப்பிப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 31.10.2025 பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்கள் மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சரிபார்ப்பதற்கான கடைசி மேலும் விவரங்கள் பெறுவதற்கும் தேதி நவம்பர் மாதம் 15ஆம் தேதி ஆகும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ទំនន់ welwo.chn-moleg gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது மத்திய நல ஆணையர் அலுவலகம் தொழிலாளர் நல அமைப்பு, தரைதளம், சிட்கோ கிளை அலுவலக கட்டடம், ஆலந்தூர் சாலை கிண்டி சென்னை 600032 என்ற முகவர்க்கு நேரில் சென்றோ கூடுதல் விவரங்களை பெற்றுக் கொன்னலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.