பள்ளிக்கல்வி - தேர்தல் பணி -2026 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்கான அலுவலர்கள் Annexure - 1 பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் - CEO Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 24, 2025

பள்ளிக்கல்வி - தேர்தல் பணி -2026 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்கான அலுவலர்கள் Annexure - 1 பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் - CEO Proceedings



School Education - Election Work - Request to fill and send Annexure - 1 for election work in 2026 - CEO Proceedings - பள்ளிக்கல்வி - தேர்தல் பணி -2026 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்கான அலுவலர்கள் Annexure - 1 பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் - CEO Proceedings

பள்ளிக்கல்வி - தேர்தல் பணி - திருவள்ளூர் மாவட்டம் -2026 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்கான அலுவலர்கள் Annexure - 1 பூர்த்தி செய்து அனுப்ப கோருதல் - தொடர்பாக .

பார்வையில் காணும் கடிதத்தின்படி, திருவள்ளூர் மாவட்டம், 2026 ஆம் ஆண்டு தேர்தல் பணிக்கான அலுவலர்கள் படிவம் - 1 பூர்த்தி செய்து அனுப்ப கோரப்பட்டுள்ளது.

திருவள்ளூர் / பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொக / இநிக. /தனியார்பள்ளிகள்) தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை ஆசிரியர்கள் பகுதி நேர ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் தேர்தல் படிவம் (Annexure - 1) புகைப்படத்துடன் கூடிய மற்றும் Excel படிவம் -1 & 2 மூன்று நகல்களில் தயார் செய்து எவரது பெயரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்து சான்று அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்பள்ளிகள்) தங்களது அலுவலக பணியாளர்கள் படிவம் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும், விலக்கு கோரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி ஆசிரியர்கள் / பணியாளர்கள் விவரங்களை தனியாக Excel படிவத்தில் அளித்தல் வேண்டும் மாற்றுத்திறனாளிகளில் எவரேனும் தேர்தல் பணி மேற்கொள்ள விருப்பம் தெரிவித்தால் அன்னாரிடமிருந்து விருப்ப கடிதம் பெற்று படிவத்துடன் (3 நகல்) இணைத்து அனுப்புதல் வேண்டும்.

இப்படிவங்கள் மற்றும் Excel படிவத்தை நன்கு கூர்ந்தாய்வு செய்து சரியான விவரங்கள் 27.10.2025 பதியப்பட்டுருப்பதை உறுதி செய்து முதன்மைக்கல்வி அலுவலத்தில் (திங்கட்கிழமை) மாலை 05.00 மணிக்குள் முகப்பு கடிதம், Excel படிவம், சான்றுடன் தனிநபர் மூலம் ஒப்படைத்தல் வேண்டும் எனச் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் / அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இதில் காலதாமதம் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்குமாறும் எவருடைய பெயரும் விடுபடாமல் அனுப்பி வைக்க சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் / அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Election Proceedings - Download here

Election Polling Personnel Format - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.