தீபாவளி எண்ணெய் குளியலின் அவசியமும் அதன் நன்மைகளும் The necessity and benefits of Diwali oil bath
நம்முடைய பாரம்பரியத்தின் படியும்,ஆயுர்வேத மருத்துவத்தின் படியும் எண்ணெய் தேய்த்து குளிப்பது ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒன்று.
அதுவும் நம் முன்னோர்கள் வாரத்துக்கு இரண்டு நாட்களாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தைக் கடைபிடித்து வந்தனர். கால மாற்றத்தின் வேகத்தில் இப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. மனித உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு இதுவும் காரணமாக இருக்கிறது. அப்படி எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அவசியத்தை உணர்த்தும் பண்டிகையாகவே தீபாவளியைப் பார்க்கலாம்’’ . எண்ணெய் குளியலின் அவசியமும் அதன் நன்மைகளும்.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கட்டாயம் எண்ணெய் தேய்க்கும் முறையை கடைபிடிப்பது முக்கியம். ஏனெனில், பண்டிகை காலங்களில் நாம் அதிக அளவு உணவுகளையும், பலகாரங்களையும் உண்போம். அதனால் நமக்கு நல்ல பசி தேவை. அதனால், அன்றைய தினம் எண்ணெய் தேய்த்து குளித்தால் நம் உடலின் தட்பவெப்பம் சீரான நிலைக்கு வருவதோடு நல்ல பசியையும் ஏற்படுத்தும்.
ஞாபக சக்தியை வளர்க்கிறது. நல்ல தூக்கத்துக்கு உதவுகிறது. காலில் வெரிக்கோஸ் ஏற்படாமல் பாதுகாக்கிறது. நம் சருமத்துக்கு பளபளப்பைத் தருகிறது. குடல் பிரச்னை வராமல் தடுக்கிறது’’ . ‘‘எண்ணெயை உச்சந்தலை முதல் பாதம் வரை தேய்க்க வேண்டும். இது அந்த உறுப்புகளின் திறனை அதிகரிக்கச் செய்வதோடு உடலின் தட்பவெப்பத்தையும் சீரான நிலையில் வைத்திருக்கும். எண்ணெய் தேய்த்த உடனே குளிக்கக் கூடாது. 15 நிமிடத்திலிருந்து 45 நிமிடத்துக்கு பிறகே குளிக்க வேண்டும். பின்பு இளம் சூடான தண்ணீரில் குளிக்கலாம்.
முக்கியமாக, எண்ணெய் குளியலின்போது தலைக்கு சிகைக்காயும், உடலுக்குப் பாசிப்பருப்பு மாவும் பயன்படுத்துவது நல்லது. பாசிப்பருப்பு உடலில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி, சருமத்துக்கு பளபளப்பைத் தரும். சிகைக்காய் தலையில் உள்ள எண்ணெய் பசையை நீக்குவதோடு முடி உதிர்வு, இளம் நரையை தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அப்போதுதான் எண்ணெய் குளியலின் முழுமையான பலன் அப்படியே கிடைக்கும். எப்படி குளிக்க வேண்டும்.
உடலின் தலைமைச் செயலகம், மூளையாகும், காலில் இருந்து நீரை ஊற்றி குளித்துவரும்போது, உடலின் வெப்பம் மூக்கு மற்றும் கண்கள் வழியே வெளியேறும், மாறாக தலையில் ஊற்றிக் குளிக்கும்போது, உடலில் உள்ள வெப்பம் மற்ற பாகங்களின் வழியே வெளியேற வாய்ப்பில்லாமல், தலையில் சேர்ந்து, அதனால், உடல் சூடு அதிகரித்து விடுகிறது. இப்படி எத்தனை முறை குளித்தாலும், உடல் சூடு தீர்வதில்லை, எனவே இதனைத் தவிர்க்க, காலில் இருந்து குளியலைத் தொடங்கவேண்டும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.