வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் Teachers hold protest at the regional education office
வட்டார கல்வி அலுவலகத்தில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
வட்டாரத்தில் உள்ள 120 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தங்கள் மருத்துவ விடுப்பு நாட்கள் ஈட்டிய விடுப்பு நாட்களிலிருந்து தவறாகக் கழிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, நேற்று மாலை சிவகங்கை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரத் தலைவர் இந்திராகாந்தி, செயலாளர் கணேசன், பொருளாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது.
வட்டாரக் கல்வி அலுவலர் சார்லஸ் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விதிமுறைப்படி ஈட்டிய விடுப்புகளிலிருந்து ஊதியமற்ற அசாதாரண விடுப்புகளை மட்டுமே கழிக்க வேண்டும் என்றும், ஆனால் தற்போது மருத்துவ விடுப்புகளையும் கழிப்பதால் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.