பீகாரில் "பழைய ஓய்வூதிய திட்டம்" - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 28, 2025

பீகாரில் "பழைய ஓய்வூதிய திட்டம்" - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்



பீகாரில் "பழைய ஓய்வூதிய திட்டம்" - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ் "Old Pension Scheme" in Bihar - Tejashwi Yadav made election promises

பீகார் பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டது இந்தியா கூட்டணி

* தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தேஜஸ்வி யாதவ்

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்;

1.ஆட்சி அமைந்த 20 நாட்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சட்டம் இயற்றப்படும்.

2. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

3. டிச.1 முதல் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 நிதியுதவியும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 நிதியுதவி அளிக்கப்படும்.

4. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம். 5. ஒவ்வொரு தனிநபருக்கும் ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.

6. மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வரம்பை அதிகரிக்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, அரசியலமைப்பின் 9வது அட்டவணையில் சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

7. பஞ்சாயத்து, நகராட்சி அமைப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீடு, 30 ஆக உயர்த்தப்படும்.

8. பட்டியலின பிரிவினருக்கு 16 சதவீதம் என்பது 20 சதவீதம் ஆகவும், பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டில் விகிதாச்சார அதிகரிப்பும் உறுதி செய்யப்படும்.

9. வக்ப் திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படும். அனைத்து இஸ்லாமிய மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

10. புத்தகயாவில் உள்ள புத்தகோவில்களின் நிர்வாகம், பவுத்த மக்களிடம் ஒப்படைக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.