முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக் கான தேர்வை தள்ளி வைப்பது குறித்து பரி சீலித்து முடிவெடுக்க, ஆசிரியர் தேர்வு வாரி யத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்த ரவிட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தேர்வு, அக்., 12ம் தேதி நடக்க உள்ளது. இதற் கான அறிவிப்பை, ஆசி ரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 10ல் வெளியிட்டது.
இந்த தேர்வை நவம்பருக்கு கள்ளி வைக்கக்கோரி, திருச்சி மாவட்டம் நாகையதல் ஹார் பகுதியைச் சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார் என் பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'கல்வி யியல், உளவியல், பொது அறிவு, தமிழ் தகுதித் தேர்வு போன்ற பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. முதன்மை பாடங்களி லும் கூடுதல் பகுதிகள் இணைக்கப்பட்டு, பழைய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப் பட்டு உள்ளது. 'புதிய பாடங்களை படிக்க, உரிய அவகாசம் வழங்க வேண்டும். எனவே, தேர்வை தள்ளி வைக்க வேண்டும்' என்று கூறி யுள்ளார்.
இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.கதிரேசன் ஆஜராகி, "புதிய பாடத்திட்டத் துக்கு ஏற்ப, தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் வழங்க வில்லை எனில், மன உளைச்சல் ஏற்படும்.” என்றார். இதைய டுத்து நீதிபதி, மனு கோரிக்கை தாரரின் மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க, ஆசிரியர் தேர்வு வாரி யத்துக்கு உத்தரவிட்டு, மனுவை வைத்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.