'டெட்' தேர்வில் விலக்கு கோரி பிரதமருக்கு ஆசிரியர்கள் கடிதம்
ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்ச்சி பெற்றி ருப்பது கட்டாயம் என செப்., 1ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவ் வாறு தேர்வெழுத விருப்பம் இல்லாத வர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக் கலாம் எனவும் உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள் ளிகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம், 3 லட் சத்து, 3,350 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் முதுநிலை ஆசி ரியர்கள், 5 ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறுபவர்கள். ஏற்கனவே தேர்வு எழு தியவர்கள் போக, 1.45 லட்சம் அரசு ஆசிரியர்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும், தகுதி தேர்வு எழுதுவது தற்போது கட்டாயம் ஆகிறது.
அகில இந்திய ஆசிரியர் கூட்ட ணியின் முடிவை, தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயல் படுத்தும் விதமாக, செப்., 22 முதல், 25 வரை அனைத்து பள்ளிகளில் இருந்தும், பாரத பிரதமர் மோடிக்கு சுடிதம் அனுப்ப முடிவு செய்துள் ளனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி ஒன்றி யத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகள் சார்பிலும், ஆசிரியர் தகுதி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலை யிட்டு, ஆசிரியர்களுக்கு நீதி வழங் குங்கள் என்ற செய்தியை கொண்ட கடிதங்களை, கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் ஆசிரி யர்கள் நேற்று அனுப்பினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.