கேள்விக்குறி
236 ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித்தரம்... அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரியும்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 236 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், மாணவ - மாண வியரின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது. இதனால், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறையும் என, மாணவர்களின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்
காஞ்சிபுரம் மாவட்டத் தில், 30 அரசு உயர்நிலை, 51 மேல்நிலை, 20 அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம், 121 பள்ளி கள் இயங்கி வருகின்றன. இதில், 40,000க்கும் மேற் பட்ட மாணவ - மாணவி யர் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசி ரியர்கள் என, 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில், 236 பணியிடங் கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு ஆசிரியர் இரண்டு மற்றும் அதற்கு மேல் பாடதிட்டங்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்நிலைப் பள்ளி யில் படிக்கும் மாணவர் களுக்கு ஓரளவிற்கு சரி கட்ட முடிகிறது. ஆனால், மேல்நிலைப் பள்ளி மாண வர்களுக்கு தனித்தனி பாடங்கள் என்பதால், கால், பட்டதாரி ஆசிரியர்கள் சிர மத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
குறிப்பாக, கணிதம், வேதியியல், இயற்பி யல், உயிர் வேதியியல் ஆகிய பாடப்பிரிவுக ளுக்கு போதிய முதுகலை பாடப்பிரிவு ஆசிரியர் கள் இல்லை. மேலும், ஆங்கில வழிக்கல்வி மற் றும் தமிழ் வழிக்கல்வி மாணவ - மாணவியருக்கு கற்பித்தல் சிரமம் உள்ளது. தமிழ் வழிக்கல்வி சொல்லி கொடுக்கும் ஆசி ரியர்கள், ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல், முக் கிய வினாக்களை மட்டும் குறித்து கொடுத்து, அவர் களை படிக்க சொல்லி விடுகின்றனர்.
இதே நிலை நீடித்தால், அரசு பள்ளி மாணவ -மாணவியரின் கல்வி தரம் பாதிக்கப்படுவ தோடு, தேர்ச்சி விகிதமும் குறையும் நிலை உள்ளது என, பெற்றோர் குற்றஞ் சாட்டுகின்றனர்.
அரசு மாண இதுகுறித்து, பள்ளி மாணவ வியரின் பெற்றோர் கூறிய தாவது:
ஆறாம் வகுப்பு முதல் ஆங்கில வழி படித்து விட்டு வரும் மாணவர் கள், மேல்நிலை படிக்க செல்லும்போது, பாடம் நடத்துவதற்கு ஏற்ற ஆங் கில பாடப்பிரிவுக்கு ஆசி ரியர்கள் இல்லை.
புதிய பாடப்பிரிவு துவக்கணும்
காஞ்சிபுரம் நகரம் மற்றும் அதை ஒட்டி இருக் கும் சில மேல்நிலைப் பள்ளிகளில், கணக்கு பதி வியல் பாடப்பிரிவு அடங்கிய 'சி' குரூப் மற்றும் தொழில் கல்வி ஆகிய பாடப்பிரிவுகள் இயங்கி வருகின்றன.
கோவிந்தவாடி, புள்ளலுார், பரந்தூர் உள்ளிட்ட சில பள்ளிகளில் கணக்குப்பதிவியல் பாடப்பிரிவு மற்றும் தொழில் கல்வி பாடப்பிரிவு வகுப்புகள் துவக்கப்படவில்லை.
இதனால், கிராமப்புற மாணவ - மாணவியர், காஞ்சிபுரம் நகரம் மற்றும் ராணிப்பேட்டை உள் ளிட்ட பிற மாவட்டங்களில் சென்று படிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.