எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 29, 2025

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி



எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியர்களுக்கு பயிற்சி

தொடக்​கப்​பள்ளி ஆசிரியர்​களுக்கு எண்​ணும் எழுத்​தும் பயிற்சி முகாம் அக்​. 7 முதல் நடைபெற உள்​ளதாக பள்​ளிக் கல்​வித்​துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து மாநிலக் கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனம்​(எஸ்​சிஇஆர்​டி) சார்​பில் அனைத்து முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை: நடப்பு கல்​வி​யாண்​டில்​(2025-26) 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்​பிக்​கும் அனைத்து ஆசிரியர்​களுக்​கும் எண்​ணும் எழுத்​தும் பாடப்​பொருள் சார்ந்து 2-ம் பரு​வத்​துக்​கான ஒன்​றிய அளவி​லான பயிற்சி அக்​டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

பயிற்சி நடை​பெறும் நாளில் தொடக்க வகுப்​பு​களில் கல்வி சார்ந்த பணி​கள் பாதிக்​கப்​படக்​கூ​டாது. ஆசிரியர் இல்லை எனில் வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் மூலம் மாற்​று ஆசிரியரை நியமனம் செய்ய வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்



எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்குதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் எண்ணும் எழுத்தும் பயிற்சி - 2025 2028 ஆம் கல்வியாண்டு - எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவம் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி வழங்குதல்- தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ள தெரிவித்தல் பங்கேற்பாளர்களை பணி விடுவிப்பு செய்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக

இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 07.10.25 - 10.1025 இந்த நாட்களுக்குள் ஏதாவதுஒரு நாள் ஒன்றிய அளவில் நடைபெறும்...

Ennum Ezhuthum Term - II Block Level Training - Reg. .pdf Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.