DSE - August 2025 School Children's Movie - The White Balloon - Movie Screening - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 12, 2025

DSE - August 2025 School Children's Movie - The White Balloon - Movie Screening



DSE - August 2025 School Children's Movie - The White Balloon - Movie Screening

ஆகஸ்ட் மாத சிறார் திரைப்படம் The White Balloon திரையிடுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் மாற்றங்களும் ஏராளம் . திரைப்படங்களால் அறம் மற்றும் சமத்துவமற்ற கருத்துகளை , கலந்துரையாடல்களை பற்றி எளிதான வகையில் மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்திவிட முடியும். மாணவர்களுக்கு சமூக நீதி , சமத்துவம் , அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும் , திரைப்படக் கலையை ரசிப்பதற்கும் , கதை , திரைக்கதை , நடிப்பு , உடையலங்காரம் . பின்னணி வடிவமைப்பு , இசை , ஒளிப்பதிவு , படத்தொகுப்பு , இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திறனை வளர்க்கும் நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் திரையிடல்கள் நடத்தப்படுகிறது . தமிழ்நாட்டில் அனைவராலும் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் பாராட்டப்பட்டவற்றுள் மிகவும் முக்கியமானது திரைப்படங்களை பள்ளிகளில் திரையிட்ட நிகழ்வு.

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி , சென்ற ஆண்டை தொடர்ந்து 2025. 2026 ஆம் கல்வியாண்டில் , அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் கண்டுணரும் வகையில் ஆகஸ்ட் மாதம் " தி ஒயிட் பலூன் . The White Balloon + திரைப்படமானது திரையிடப்பட உள்ளது.

DSE - Aug 2025 Movie Screening.pdf 👇👇👇👇 Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.