அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி - பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, August 21, 2025

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி - பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு



திறனறி தேர்வுகளை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி | பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு

அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக 'ப்யூச்சர் ரெடி' வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக் கப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம் படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'எதிர்காலத்துக்கு தயாராகு' (Future Ready) எனும் முயற்சி தற்போது முன்னெடுக் கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் தோறும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறி வியல், பொது அறிவு சார்ந்த பாடங்களில் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் படித்த பாடப் பொருட்களை ஒட்டி உயர் சிந் தனை வினாக்களை வடிவமைக் கும் பணி எஸ்சிஇஆர்டிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஆங்கிலப் பாடத்தில் பத்திகள் வாசித்தல் மற்றும் இலக்கணம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் சிந்தனை திறனை மேம்படுத்தும் வினாக்கள் ஒவ் வொரு மாதமும் தயாரிக்கப்பட்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனம் மூலமாக பள்ளிகளுக்கு அனுப்பப்படும். அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதி விறக்கம் செய்து, கணிதம், ஆங் கிலம், அறிவியல் பாட ஆசிரியர் களுக்கும், பொது அறிவு வினாக் களை வகுப்பு ஆசிரியருக்கும் தரவேண்டும். இந்த வினாக் களைக் கொண்டு மாதம்தோறும் மாணவர்களிடம் மதிப்பீடு நடத்த வேண்டும். இதை தலைமை ஆசிரியர்கள் முறையாக கண் காணிக்க வேண்டும்.

இதன்மூலம் திறன் அடிப் படையிலான கேள்விகளில் மாணவர்கள் நிபுணத்துவம் பெறு வதுடன், பல்வேறு அடைவுத் தேர்வுகளையும் எளிதில் எதிர் கொள்ள முடியும். பாடங்களை மாணவர்கள் நன்கு புரிந்து படிக் கவும் வழிசெய்யும். ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார, மாவட்ட, முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பொறுப்பு அலுவலர்கள் தங்கள் பள்ளி ஆய்வின்போது இந்த செயல்பாடுகளின் நிலை குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாட வேண்டும். கலந்தாய்வுக் கூட்டங் களின் போதும் இதுபற்றி விவா திக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலங்களில் உயர்கல்விக் கான நுழைவுத் தேர்வுகள் மற் றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எழுத இது உதவிகரமாக இருக்கும் என்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.