ஆசிரியர்களுக்கு பண்டிகை, திருமண முன்பண திட்டங்களில் சிக்கல்
-
உத்தரவு போட்டாச்சு; நிதி ஒதுக்கீடு என்னாச்சு
தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள பண்டிகை முன்பணம், திருமண முன்பணம் திட்டங்கள் தொடர்பாக அரசாணை வெளியிட்டும், இதுவரை அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால் இத்திட்டங்களை பெறு வதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல ஆசிரியர்கள் திருமண முன்பணத் திட்டத்திற்கு விண்ணப்பித்தும் கிடைக் காமல் காத்திருக்கின்றனர்.
இந்தாண்டு பட்ஜெட் 110 கூட்டத்தொடரில் விதியின் கீழ் அரசு ஊழி யர்களுக்கு முதல்வர் ஸ்டா லின் பல்வேறு நலத்திட் டங்களை அறிவித்தார்.
இதில் அரசு ஊழியர் கள் பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், அரசு ஊழியர்கள், மகன்/மக ளுக்கான திருமண முன் பணம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
இதுதொடபர்பான அர சாணை ஜூனில் வெளி யானது. ஆனால் அரசு உயர்த்தி வழங்கியதற்கான கூடுதல் தொகை இதுவரை அரசு பள்ளிகளுக்கான 'கணக்கு தலைப்பு'களுக்கு (அக்கவுண்ட் ஹெட்) ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் தீபாவளி முன் பணமே விருப்பமுள்ள அனைத்து ஆசிரியர்களுக் கும் கிடைக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதுபோல் தீபாவளியை முன்னிட்டு செப்டம்ப ரில் அதற்கான முன்பணம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் வழங்கும் வகையில் நிதி இருப்பு இல்லை. எனவே அரசு அறிவித்த இந்த 2 திட்டங்களுக்கான கூடுதல் தொகையை பள்ளிகளுக்கு விரைவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.
அரசு உயர்த்தி வழங்கியதற்கான கூடுதல் தொகை இதுவரை அரசு பள்ளிகளுக்கான 'கணக்கு தலைப்பு'களுக்கு (அக்கவுண்ட் ஹெட்) ஒதுக்கீடு செய்யவில்லை
Sunday, August 24, 2025
New
ஆசிரியர்களுக்கு பண்டிகை, திருமண முன்பண திட்டங்களில் சிக்கல் - உத்தரவு போட்டாச்சு; நிதி ஒதுக்கீடு என்னாச்சு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.