'ப' வடிவில் மாணவர்கள் இருக்கை சாத்தியமில்லை என கைவிரிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 17, 2025

'ப' வடிவில் மாணவர்கள் இருக்கை சாத்தியமில்லை என கைவிரிப்பு



'ப' வடிவில் மாணவர்கள் இருக்கை சாத்தியமில்லை என கைவிரிப்பு

பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைப்பதற்கு சாத்தியமில்லை என, ஆசிரியர்கள் தெரிவித் துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வழக்கமாக மாணவர்கள் வரிசையாக உட்கார வைக்கப்படுவர். படிப்பில் சிறப்பாக இருக் கும் மாணவர்கள் முன்வ ரிசையிலும், பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரி சையிலும் அமர வைக்கப் படுகின்றனர். இத்தகைய வரிசை முறை மாணவர் கள் மத்தியில், வேறுபாடு களை ஏற்படுத்துகிறது.

இதை மாற்றும் நோக் கத்துடன், அரை வட்ட வடிவில் மாணவர்கள் இருக்கை அமைக்கப்படு வதை கேரளாவில் திரைப் படம் வாயிலாக வலியுறுத் தப்பட்டது. இதையடுத்து, கேரளாவில் 8 பள்ளிகளில், இதுபோன்ற முறை கொண் டுவரப்பட்டது. இந்நிலையில், தமிழகத் திலும் பள்ளிகளில், இந்த நடைமுறையை பின்பற்ற பள்ளிகல்வித்துறை உத்தர விட்டது. இதன் வாயிலாக மாணவர்களை ஆசிரியர் கள் எளிதாக கவனிக்க முடி வதுடன், கலந்துரையாட லையும் மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இருக் கைகளை 'ப' வடிவில் எடுக்கப்பட்டு, தோல்வி யில் முடிந்துள்ளது. அமைக்க நடவடிக்கை

அரசு பள்ளி ஆசிரியர் கள் கூறியதாவது:

ஒவ்வொரு வகுப்பறை யிலும் மாணவர்கள் எண் ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி கிடையாது. இதுமட்டுமின்றி, 'ப' வடி வில் இருக்கைகள் போடப் பட்ட வகுப்பறையில் ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களை யும் நேரடியாக பார்த்து பாடம் நடத்த முடியும்.

ஆனால், கரும்பல கையில் ஏதேனும் ஒரு பாடத்தை சுட்டிக் காட்டி ஏற்படும். எழுதும் போது, ஓரமாக அமர்ந்திருக்கும் மாணவர் களுக்கு கழுத்து வலி, பார் வைகோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் இதனால், வகுப்பறையில் 'ப' வடிவில் மாணவர்கள் இருக்கைகளை அமைப் பது, சாத்தியமாகாது. அதற்கான நடவடிக்கை யும் மேற்கொள்ளப்பட வில்லை.

இவ்வாறு, கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.