அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுக்களை முதல்வர் இழக்கிறார் - தமிழக ஆசிரியர் கூட்டணி காட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 5, 2025

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுக்களை முதல்வர் இழக்கிறார் - தமிழக ஆசிரியர் கூட்டணி காட்டம்



அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுக்களை முதல்வர் இழக்கிறார் - தமிழக ஆசிரியர் கூட்டணி காட்டம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுக் களை முதல்வர் ஸ்டா லின் இழந்து வருகிறார்” என தமிழக ஆசிரியர் கூட் டணி பொதுச் செயலாளர் அண்ணாமலை தெரிவித் தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:

தி.மு.க., ஆட்சி அமைந் ததும் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என தெரிவித்து விட்டு தற் போது குழு அமைத்திருப் பதாகவும், அதன் அறிக் கையை செப்டம்பரில் அமல்படுத்துவோம் என தமிழக அரசு தெரிவித் துள்ளது. தமிழக அரசின் 9 அறிவிப்புகளையும் ஆணையாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும். கொரோனாவின் போது முடக்கப்பட்ட அகவி லைப்படி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் விடுப்புக்களை பணமாக்கலாம் என முன் னாள் முதல்வர் கருணா நிதி தெரிவித்த அறிவிப்பு தற்போது 4 ஆண்டுகளாகி யும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்கள், ஆசி ரியர்களின் ஓட்டுக்களை முதல்வர் ஸ்டாலின் இழந்து வருகிறார்.

புதிய ஓய்வூதியத்திட் டத்தால் பேர் 6.25 லட்சம் பாதிக்கப்பட்டுள் ளனர். எந்த திட்டத்தை யும் கொண்டுவரவில்லை என்றால் 200 தொகுதி வெற்றி பெறுவோம் என் பதை தி.மு.க., கூற முடி யாது.

கல்வித்துறையில் 15 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இடை நிலை, முதுநிலை ஆசி ரியர்களுக்கான ஊதியத் தில் வித்யாசம் உள்ளது. தொடக்க கல்வி ஆசிரியர் களாக பெண்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். புதி தாக கொண்டு வரப்பட்ட சட்டத்தால் 80 சதவீத ஆசி ரியர்களின் பதவி உயர்வு இல்லாமல் மாறுதல் பெற முடியாமல் உள்ளனர் என் றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.