'NEET' தேர்வில் கேள்வி - கல்வியாளர்கள் அதிர்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 5, 2025

'NEET' தேர்வில் கேள்வி - கல்வியாளர்கள் அதிர்ச்சி



'NEET' தேர்வில் கேள்வி - கல்வியாளர்கள் அதிர்ச்சி

நீட் நுழைவுத் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த மாணவர்கள் விடையளிக்கும் வகையில் வினா இடம் பெற்றது கல்வியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர். 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள். தவறான வினாவிற்கு ஒரு 'நெகட்டிவ்' மதிப்பெண் வழங்கப்படும். வினாத்தாளில் 117 வது கேள்வியாக 'ஈஸ்ட்'டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம்' என்ற கேள்விக்கு பீர், ரம், பிராந்தி, விஸ்கி என விடைகள் கொடுத்து சரியானதைத் தேர்வு செய்யும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. இக்கேள்விக்கு விடை 'பீர்' என எழுதினால் 4 மதிப்பெண்கள்.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களில் ஏராளமான வினாக்கள் கேட்க வாய்ப்புள்ளது.

ஆனால் வருங்கால டாக்டர்களிடம் இவ்வாறான ஒரு கேள்வி தேவையில்லாதது. வினாக்கள் சமுதாய நோக்கத்தோடு இருக்க வேண்டும். ஏற்கனவே இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவது அதிகரித்து வரும் நிலையில் 'நீட்' போன்ற உயரிய தேர்வில் இதுபோன்ற வினாவை தவிர்த்திருக்கலாம் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.