அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களை , தகுதிவாய்ந்த விடுப்பாக வரன்முறை செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவு.
பொதுப்பணிகள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 38 வேலை நிறுத்த போராட்ட நாட்களை தகுதி வாய்ந்த விடுப்பாக வரன்முறைப்படுத்தல் ஆணை வெளியிடப்படுகிறது
கடந்த 2016 , 2017 , 2019 ஆகிய ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களை , தகுதிவாய்ந்த விடுப்பாக வரன்முறை செய்ய கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி உத்தரவு . பொதுப்பணிகள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 38 வேலை நிறுத்த போராட்ட நாட்களை தகுதி வாய்ந்த விடுப்பாக வரன்முறைப்படுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது .
மேலே படிக்கப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கடிதத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 07.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டக் காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, வருவாய்த்துறையில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்ட காலங்களை வரன்முறை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், இதேபோன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரால் பல்வேறு காலக்கட்டங்களில் மேற்கொண்ட போராட்ட காலங்களான கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள 38 வேலை நிறுத்த நாட்களை தகுதிவாய்ந்த விடுப்பாக வரன்முறைப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
TNRDOA - Strike Period Regularisation Order - CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.