அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி சேர்க்கை - 2025 அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 8, 2025

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி சேர்க்கை - 2025 அறிவிப்பு.



அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி சேர்க்கை - 2025 அறிவிப்பு.

2025-26 - ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணாக்கர்கள் சேர்க்கை ( தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு மட்டும் )

தமிழ்நாடு அரசின் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மற்றும் பகுதி நேரப் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும் , சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் கீழ்க்கண்ட இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை :

https://www.tnpoly.in என்ற இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவுசெய்ய வேண்டும் . இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் ( TNEA Facilitation Centre ) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.