சரண் செய்யப்பட்ட 26 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 3, 2025

சரண் செய்யப்பட்ட 26 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



சரண் செய்யப்பட்ட 26 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே சரண் செய்யப்பட்ட 26 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை` தேவையுள்ள பள்ளிகளுக்கு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

CLICK HERE TO DOWNLOAD DSE - 26 PG Posts Proceedings -PDF

மேல்நிலைப்பள்ளிகள் - 2024-25ம் கல்வியாண்டில் - 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து ஆணை வழங்குதல் - சார்பு.

பார்வை: 1)சார்ந்த முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட 2024- 2025ம் கல்வி ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்ந்த கருத்துருக்கள் 2)தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.052348/டபிள்யு2/இ3/2024 நாள்: 17.02.2025.

தமிழ்நாட்டிலுள்ள அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2024 நிலவரப்படி மேற்கொள்ளப்பட்ட பணியாளர் நிர்ணயத்தில், ஆசிரியர் இன்றி உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post Without Person) 27 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரண் செய்யப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு பார்வை 2ல் காண் செயல்முறைகள் வாயிலாக ஆணை வழங்கப்பட்டது.

அவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள முதுகலை ஆசிரியர் (Surplus without person) பணியிடங்களை 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருவின் அடிப்படையில் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு 26 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு ( பொருளியல் – 10, இயற்பியல் – 01, வேதியியல் −01, உயிரியல் - 01, வணிகவியல் 13) அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

புதியதாக அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் (Scale Register) பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் அறிவுறுத்தப்படுகிறது.

தலைமையாசிரியருக்கு இணைப்பு - அனுமதிக்கப்பட்ட 26 கூடுதல் பணியிட விவரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.