ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹60 கோடி அனுமதித்து அரசாணை வெளியீடு!
குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை பழுதுநீக்கம் மற்றும் புனரமைத்தல் பணிகள் தொடர்பாக முறையான ஆய்வின் மூலம் கண்டறிந்து, திட்ட முன்மொழிவில் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் ஏற்கனவே இருக்கும் வசதிகளில் உள்ள பழுதுகளை பழுதுநீக்கம் செய்வதற்கு, கீழ்க்காணும் முன்னுரிமையின் அடிப்படையில் பணிகள் எடுக்கப்பட வேண்டும். அ) ஏற்கனவே உள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களை பழுதுநீக்கம் செய்தல் கீழ்க்கண்ட பணிகள் அனுமதிக்கப்படுகிறது. i. பழுதடைந்த சாய்தளங்களை பழுதுநீக்கம் செய்தல், படிக்கட்டுகள் மற்றும் கைப்பிடியுடனான புதிய சாய்தளத்தினை அனைத்து கட்டடங்களிலும் அமைத்தல். ii. பழுதடைந்த கான்கிரீட் கூரைகளை பழுதுநீக்கம் செய்வதற்கான பணியினை மேற்கொள்ளும்போது (தண்ணீர் கசியாத வகையில் சுண்ணாம்பு செங்கல் கலவை (Weathering course) சேர்த்தல் அல்லது தட்டு ஓடு பதித்தல் போன்றவை), மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாமல் இருப்பின் அல்லது பழுதடைந்திருப்பின், அவ்விடங்களில் அந்த வசதியை ஏற்படுத்தித் தரலாம். iii. ஓடுகள் வேய்ந்த கூரைகளைக் கொண்ட கட்டடங்களில், சேதமடைந்த ஓடுகள்/ விட்டங்கள்/ சாரம் கட்டும் மரங்களைச் சரிசெய்தல். iv. தற்போது சேதமடைந்துள்ள மங்களூர் ஓடு வேயப்பட்ட கட்டடங்களில், மீண்டும் அதே கூரை அமைக்க முடியாத நிலையில் இருந்தால், அவைகளை வெப்பத்தையும், ஒலி மாசுவையும் குறைப்பதற்காக PUF (Poly Urethane Foam) panel மூலம் கூரையினை மாற்றி அமைக்கலாம். கூரையின் அமைப்பிற்கு தகுந்தவாறு, தற்போதுள்ள வளைய அமைப்பை மீண்டும் தேவையான சாய்வுக்கு மாற்றி அமைக்கலாம். V. vi. vii. தேவைக்கு ஏற்ப கான்கிரீட் கூரையைப் பழுதுநீக்கம் செய்தல். கட்டட சுவர்களில் ஏற்பட்ட விரிசல்களைப் பழுதுநீக்கம் செய்தல். பழுதடைந்த கதவுகள் மற்றும் சன்னல்களைப் பழுதுநீக்குதல்/ மாற்றியமைத்தல். viii. பழுதடைந்த தரையை வழுக்காத Shahabad மற்றும் கோட்டா (Kotta) கற்பலகை மூலம் பழுதுநீக்குதல்/மாற்றியமைத்தல். ix. தேவைப்படும் இடங்களில் கரும்பலகைகளுக்கு வண்ணம் பூசுதல். கரும்பலகைகளை புதிதாக மாற்றும் பட்சத்தில், பின்புறத்தில் அலுமினியத் தகடு பொருத்தப்பட்ட Magnetic Steel Ceramic பச்சை எழுத்துப் பலகையாக மாற்றியமைக்கலாம். ஆ X. xi. xii. மின்கம்பிகளில் பழுதுபார்த்தல்/ மாற்றுதல்: மின்பொருத்துதல்களில் இடையூறு உள்ள இடங்கள், மின்கம்பிகள் மற்றும் தற்போதுள்ள வகுப்பறைகளை எதிர்காலங்களில் நுண்திறன் வகுப்பறைகளாக (Smart classrooms) மேம்படுத்துவதற்கு தேவைப்படும் மின் வசதிகளை ஏற்படுத்தலாம். கட்டடங்களுக்கு உள்ளே எண்ணெய் கலந்த வண்ணங்களும் (oil bound distemper) கட்டடங்களுக்கு வெளியே எமெல்சன் (emulsion) வண்ணங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். (கடந்த 3 வருடங்களுக்குள் எந்தவொரு பிற திட்டங்களின்கீழ், கட்டடங்களுக்கு வெள்ளை/வர்ணம் பூசுதல் பணி மேற்கொள்ளப்பட்ட பள்ளிகள் தவிர). கல்வித்துறை ஆணையர் அவர்களின் நேர்முக கடித எண்.045822/CSE/2022, நாள்: 12.08.2023ன்படி மாணவர்களுக்கு படங்களுடன் கூடிய எண் அல்லது எழுத்துகளைக் கொண்ட அடிப்படைக் கல்விக் கருத்துக்களை, பாலா ஓவியங்கள் (BaLA paintings) மூலம் காட்சித் தகவலாக சுவர்களில் வரைந்து கொடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள சமையலறைகளை பழுது நீக்கம் செய்தல் பழுதடைந்த ஆனால் கட்டமைப்பு உறுதியான நிலையிலுள்ள சமையலறைக் கூடங்கள், 3 வருடங்களுக்குள் பிற திட்டங்களின்கீழ் பழுதுநீக்கப் பணி மேற்கொள்ளப்படாதிருப்பின், பழுதுநீக்கம்/புதுப்பித்தல் மேற்கொள்ளலாம். இ) ஏற்கனவே உள்ள கழிப்பறைகளை பழுது நீக்கம் செய்தல் பணியை ஏற்கனவே உள்ள கழிப்பறைகளில் கீழ்க்கண்ட பழுதுநீக்கப் பணிகளை எடுத்துச் செய்யலாம். i. பள்ளி கழிப்பறைகளின் கான்கிரீட் கூரை, சுவர், தரை, வடிகால், கழிப்பறை கோப்பை, கை கழுவும் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி மற்றும் பிறவற்றில் ஏற்பட்டுள்ள பழுதுகளை பழுதுநீக்கம்/ புனரமைத்தல் பணிகளைச் செய்யலாம். ii. தேவை ஏற்படும் இடங்களில், தரையில் வழுக்காத தரை ஓடுகள் (Anti- slippery Tiles) பதிக்கலாம். குறுகிய காலத்தில் தரைகளில் கறை ஏற்படும், குறிப்பாக மழைக்காலங்களில் என்பதால், தரை ஓடுகளின் நிறம் வெள்ளையாகவோ அல்லது வெளிர் நிறமாகவோ இருக்கக் கூடாது. கழிப்பறைகளில் குழாய் அல்லது நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். iii. iv. கழிப்பறைகளுக்கு வெள்ளை/வர்ணம் பூசலாம். (3 வருடங்களுக்குள் பிற திட்டங்களின்கீழ் வெள்ளை/வர்ணம் பூசப்பட்ட கழிப்பறைகள் தவிர) NP ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய பணிகளின் பட்டியலை இறுதி செய்ய வேண்டும். iii. பழுதுபார்த்தல் பணிகளை இறுதி செய்ய வேண்டி, விரிவான "மதிப்பீட்டுத்தாள்" ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரால் அனுப்பி வைக்கப்படும். iv. பணிகளின் பட்டியல், குழுவால் இறுதி செய்யப்பட்டவுடன், அவை tnrd. (SIUS module) இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும். ஆ. ஒரு குறிப்பிட்ட பள்ளிக் கட்டடம், சமையலறைக்கூடம் அல்லது கழிப்பறை, சிதிலமடைந்த நிலையில் இருந்தால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் தேவை என குழு கருதினால், தற்போது உள்ள கட்டடத்தை இடிக்க பரிந்துரை செய்யலாம். அதன்படி, அரசாணை (நிலை) எண்.56, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (மா.அ.தி-4) துறை, நாள் 03.04.2008 மற்றும் அரசாணை (நிலை) 616001.28, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (மா.அ.தி.4) துறை, நாள் 23.02.2015-ல் வெளியிடப்பட்டுள்ள திருத்தம் ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, உரிய வழிமுறைகளை பின்பற்றி கட்டடத்தை இடிக்க செயற்பொறியாளர்(ஊ.வ) உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இ. இப்பணிகளின் முன்னேற்றத்தை tnrd. இணையதளத்திலுள்ள SIUS moduleல் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 5. பரிந்துரை செய்யப்பட்ட பணிகளை சோதனை சரிபார்ப்பு செய்தல் மதிப்பீடு தயாரிப்பதற்கு, ஆரம்பம் முதல் முறையான கள் ஆய்வு மேற்கொள்வது அவசியம் ஆகும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பணிகளை, சோதனை முறையில் சரிபார்த்தால்தான் சரியான மதிப்பீடு தயாரிக்க ஏதுவாயிருக்கும். சோதனை சரிபார்த்தல் (Test check) பணியின் போது கீழ்க்கண்டவைகள் உறுதி செய்யப்பட வேண்டும். i. பழுதுபார்க்கும் பணிகளில் தேவையான இனம் எதுவும் விடுபடாமல் சேர்க்கப்பட்டுள்ளது. ii. பணிகளில் தேவையில்லாத இனம் சேர்க்கப்படவில்லை. iii. விரிவான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. iv. இத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்படாத இனம் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டிடங்களின் தேர்வு மற்றும் பழுதுபார்ப்பு வகையின் சரியான தன்மையை பின்வரும் அதிகாரிகள் கீழே விவரிக்கபட்டுள்ளபடி சரிபார்க்க வேண்டும்:- i. மாவட்ட ஆட்சியர் ii. கூடுதல் ஆட்சியர்(வ)/ திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை iii. செயற்பொறியாளர் (ஊ.வ) : 1% : 10% : 20% உதவி இயக்குநர்/உதவி செயற்பொறியாளர் (ஊ.வ) நிலையில் உள்ள அலுவலர்களால் 100% சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். 6. நிர்வாக அனுமதி நிர்வாக அனுமதி மாவட்ட ஆட்சித் தலைவரால் வழங்கப்பட வேண்டும். நிர்வாக அனுமதி வழங்கும் முன் ஒவ்வொரு கருத்துருவுடனும் கீழ்க்கண்ட ஆவணங்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். i. பத்தி 3-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக்குழுவின் உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட "மதிப்பீட்டுத் தாள்". குறிப்பு - பத்தி எண் 4-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மாவட்ட அளவிலான அதிகாரிகளால் தேவையான சதவீத சோதனை சரிபார்ப்பும், உதவி இயக்குநர்/உதவி செயற்பொறியாளர் (ஊ.வ) நிலை அதிகாரிகளால் 100% சரிபார்ப்பும் திருப்திகரமாக முடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணிக்கும் விரிவான மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். எத்தகைய நிலையிலும் தோராய மதிப்பீட்டின் அடிப்படையில், கருத்துரு அனுப்புதல் கூடாது. பள்ளிக் கட்டடம்/சமையலறைக் கூடம்/கழிப்பறைக் கட்டடங்களின் உள், வெளி மற்றும் மேற்புறத்தோற்றத்தின் பல்வேறு புகைப்படங்கள் மதிப்பீட்டுடன் இணைக்கப்பட வேண்டும். புகைப்படங்கள் இணைக்கப்படவில்லையெனில், மாவட்ட ஆட்சித் தலைவரால் நிர்வாக அனுமதி வழங்கப்படக் கூடாது. பணிகளின் எண்ணிக்கையை உறுதி செய்யும் நோக்கத்திற்காகவும் அல்லது விரிவான மதிப்பீடுகள் பெறவும் பணிகளை கீழ்க்கண்டவாறு பணிகளின் வகைப்படுத்தலாம்:- ஒரு பள்ளி வளாகத்திற்குள் உள்ள அனைத்து பள்ளிக் கட்டடம் / வகுப்பறைகள் பழுதுநீக்கம் செய்வதை ஒரே பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பள்ளி வளாகத்திற்குள் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பழுதுநீக்குவதை ஒரே பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பள்ளி வளாகத்திற்குள் உள்ள சமையலறைக் கூடம் பழுதுநீக்கம் செய்யும் பணிகள் அனைத்தையும் ஒரே பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பள்ளி வளாகத்திற்குள் பழுதுபார்க்கப்படும் அனைத்து குடிநீர் வசதிக்கான பணிகளையும் ஒரே பணியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 7. தொழில் நுட்ப அனுமதி அரசாணை (நிலை) எண். 106, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ஊ1(1)) துறை, நாள் 22.06.202460 தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி தகுதிவாய்ந்த அலுவலரால் தொழில் நுட்ப அனுமதி வழங்கப்பட வேண்டும். 8. பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் ஒப்பந்தப்புள்ளி விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரின் கடித எண்.41303/2021/TU3, நாள் 16.08.2023ன்படி, ரூ.10 இலட்சத்துக்கும் அதிகமான அனைத்து கொள்முதல்களுக்கும் இ-டெண்டர் முறை பின்பற்றப்பட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) ஒப்பந்தப் புள்ளி கோரும் மற்றும் ஏற்கும் அதிகாரம் உடையவராவார். தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், 1998 மற்றும் விதிகள் 2000-ன்படி ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். அரசாணை (நிலை)எண். 106, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (2011(1)) துறை, நாள் 22.06.2024-ல் வெளியிடப்பட்ட தமிழ்நாடு ஊராட்சிகள் (பணிகள், சரக்குகள், சேவைகள் வழங்கல் மற்றும் செயல்முறைக்கான திட்டங்களையும் மதிப்பீடுகளையும் மற்றும் ஒப்பந்தங்களுக்கான நிலைமைகளையும் தயாரித்தல்) விதிகள் 2024-ன் அறிவிக்கை II-ல் கண்டுள்ள அட்டவணை I மற்றும் II-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி ஒப்பந்தப் புள்ளி கோரும் மற்றும் ஏற்கும் அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும். ஒப்பந்தப்புள்ளி கோரும்பொழுது, ஒரு பள்ளி வளாகத்திற்குள் உள்ள அனைத்து பராமரிப்பு/பழுதுநீக்கம் செய்யும் பணிகளை, ஒரே பணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியில், கட்டடம் பழுதுநீக்கம்/ கழிப்பறை பழுதுநீக்கம்/ சமையலறைக் கூடம் பழுதுநீக்கம் ஆகிய பணிகள் ஒரே தொகுப்பாக கணக்கிடப்பட்டு, அத்தொகுப்பிற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும். 9. செயல்படுத்தும் நடைமுறை அரசாணை (நிலை) எண். 106, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ஊ1(1)) துறை, நாள் 22.06.2024-ன்படி, இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு அளவீடு மற்றும் மேலளவு மேற்கொள்ளப்பட வேண்டும். 10.நிதி மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமிருந்து தேவையின் அடிப்படையில் பெறப்படும் மதிப்பீட்டுத் தொகையின்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரால், மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கென பராமரிக்கப்படும் ஒற்றைச்சாளர வங்கிக் கணக்கில் (Single Nodal Account) வைக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்திற்கான நிதியை முன்னேற்றத்தின் அடிப்படையில் செலவினங்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரால் அங்கீகரிக்கப்படும். 11. தரக்கட்டுப்பாடு கட்டுமானப் பணிகளை செயல்படுத்தும் நிறுவனம், அனைத்து பொருட்களையும் சோதனை செய்வதற்கு தரக் கட்டுப்பாட்டுப் பதிவேட்டையும் மற்றும் பணித்தள பதிவேட்டையும் பராமரிக்க வேண்டும். இப்பதிவேடுகளை ஆய்வு அலுவலர்களால் அவ்வப்போது சரிபார்க்கப்பட வேண்டும். மேற்கண்ட தரக்கட்டுப்பாட்டு முறையை தவிர, இந்தத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளின் தரத்தைக் கண்காணிப்பதற்காக சுதந்திரமான மூன்றாம் தரப்பு கண்காணிப்பாளர்கள் அதாவது மாநிலத் தரக் கண்காணிப்பாளர்கள் (திட்டங்கள்) நியமிக்கப்பட வேண்டும். 12. ஆவணப்படுத்துதல் இத்திட்டத்தில் பணிகளை அடையாளம் காண்பதில் தொடங்கி, பணிகள் செயல்படுத்தப்படும்போதும், பணிகள் நிறைவடையும் வரையிலான அனைத்து விரிவான, பலவிதமான நிலைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். பணி முடிக்கப்பட்ட பின்பு, பள்ளி பழுதுபார்ப்பு/புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள விவரம், திட்டத்தின் பெயர், அதாவது, "பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்", செலவிடப்பட்ட தொகை ஆகியவை புனரமைக்கப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதியில், தெளிவாக நன்கு தெரியும் வண்ணம் தமிழில் எழுதப்பட வேண்டும். பணிகள் முடிவுற்றதும், தெளிவான புகைப்படங்கள் (High Resolution Photographs) tnrd. இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பணிமுடிவுற்ற பின்னர் தெளிவான புகைப்படங்களை (High Resolution Photographs) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்திற்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். 13. வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களுக்கு மேற்காணும் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைகளுக்கேற்ப ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரை கலந்தாலோசித்து, தேவையான மாற்றங்களை செய்ய அதிகாரம் உள்ளது.
CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.47 Union Schools Infrastructure - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.