சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை (2025-26ஆம் ஆண்டு) செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு! 2025-26ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 1. திட்டத்தின் பின்னணி 2. சட்டமன்ற உறுப்பினர் தமது தொகுதிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து அவற்றுக்கான பணிகளை தேர்வு செய்து செயல்படுத்துவதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 1997-98 ஆம் ஆண்டில் ஒரு தொகுதிக்கு ரூ.25 இலட்சம் ஒதுக்கீட்டுடன் துவங்கப்பட்டது. இத்திட்டம் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு பணியாற்ற இத்திட்டத்தினை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். மாநில அரசு இத்திட்டத்தின்கீழ், ஒரு தொகுதிக்கான ஆண்டு நிதி ஒதுக்கீட்டினை ரூ.35 இலட்சமாக 1998-99 ஆம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கியதோடு அதன் தொடர்ச்சியாக 1999-2000 ஆம் ஆண்டு முதல் ரூ.50 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. மேலும், 2000-2001 ஆம் ஆண்டு முதல் ஒரு தொகுதிக்கான நிதி ஒதுக்கீடு ரூ.50 இலட்சத்திலிருந்து ரூ.77 இலட்சமாக உயர்த்தப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டு முதல், இத்திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு ஒரு தொகுதிக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.2.50 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசால் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. வரையறை "மாவட்ட நிர்வாகம்' என்பது மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவரையும், சென்னை பெருநகர மாநகராட்சியை பொறுத்தவரை, சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையரையும் குறிக்கும். 'செயல்படுத்தும் நிறுவனம்/ அலுவலர்' என்பது மாவட்ட நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட பணிகளை செயல்படுத்தும் நிறுவனம்/ அலுவலரைக் குறிக்கும். 'பரிந்துரைக்கப்படாத தொகை' என்பது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரால் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பரிந்துரை செய்யப்படாத தொகை ஆகும். 'சேமிப்புத்தொகை' என்பது சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்து முடிவுற்ற பணிகளுக்கு செலவிடப்பட்டதொகை வழங்கப்பட்ட பிறகு மீதம் இருக்கும் தொகை சேமிப்புத் தொகை ஆகும். 3. அம்சங்கள் 3.1 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் முழுமையாக மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கு ஒரு தொகுதிக்கு ரூ.3 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3.2 ஒவ்வொரு சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினரும், தங்கள் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணிகளை பரிந்துரை செய்யலாம். 3.3 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அப்பகுதி மக்களின் உட்கட்டமைப்பு தேவைகள், வளர்ச்சிக்கான தேவைகள் மற்றும் நிலையான சொத்துக்களை உருவாக்கிடும் வகையிலான பணிகள் அனுமதிக்கப்படுகிறது. - ― 3.4 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளை முன்னேற்றம் அடைய செய்திட தேவையான சிறப்பு கவனத்தினை செலுத்தி, அப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களுக்கு ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியில் குறைந்த பட்சம் 22% (ஆதிதிராவிடர் 21%, பழங்குடியினர் 1%) ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு பணிகளை பரிந்துரை செய்தல் வேண்டும். ஏதேனும் சில மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் தொகை இல்லாத பட்சத்தில், 22% மதிப்பிலான பணிகள் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வழங்கப்பட வேண்டும். 4. பணிகளை பரிந்துரைத்தல் / அனுமதித்தல்: 41. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் வழிகாட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்பு மொத்த நிதி ஒதுக்கீட்டிற்கும் பணிகளை மாவட்ட நிர்வாகத்திடம் உரிய படிவத்தில் பரிந்துரை செய்தல் வேண்டும். 4.2. சட்டமன்ற உறுப்பினர்கள், 2021-22, 2022-23, 2022-23, 2023-24 மற்றும் 2024-25ஆம் நிதி ஆண்டுகளுக்கான சேமிப்பு நிதியிலிருந்தும் பணிகளை பரிந்துரை செய்யலாம். 4.3. சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.3 கோடியில், சட்டமன்ற உறுப்பினர்களால் முக்கியமான பணிகளாக கருதப்படும் கீழ்கண்ட பணிகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட NP NP 5. செயலாக்கம் 5.1 மாவட்ட நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்யும் பணிகளை திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி பரிசீலித்து உரிய நிர்வாக அனுமதி வழங்கிட வேண்டும். 5.2 திட்ட செயலாக்க நிறுவனம்/ அலுவலரை பணிகளின் தன்மைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும். 5.3 சட்டமன்ற உறுப்பினரால் பரிந்துரை செய்த தகுதியுள்ள பணிகளுக்கு 30 நாட்களுக்குள் உரிய நடைமுறைகளை பின்பற்றி நிர்வாக அனுமதி வழங்கப்பட வேண்டும். மாறாக அப்பணியானது பரிந்துரைக்கப்பட்ட நாளிலிருந்து நிராகரிக்கப்படுமேயானால் 15 நாட்களுக்குள் அதற்கான உரிய காரணத்துடன் தெரிவிக்கப்பட வேண்டும். 5.4 சட்டமன்ற திட்டத்தின்கீழ் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 22% ஊரகப் பகுதிகளில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதி மற்றும் நகர்புறங்களில் குடிசைப்பகுதிகளில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதிக்கென ஒதுக்கப்பட வேண்டும். 5.5 பணிகளை செயல்படுத்துதல் / தளவாடச் சாமான்களை கொள்முதல் செய்தல் ஆகியவை தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், 1998 மற்றும் தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் விதிகள், 2000ன் படி மேற்கொள்ளப்பட வேண்டும். 5.6 பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு, சட்டமன்ற உறுப்பினர் அவர் தம் விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து, பணிகளை தேர்வு செய்யலாம். 5.7 சட்டமன்ற உறுப்பினர் அவர் தம் விருப்பத்தின் அடிப்படையில் "எதிர்மறையான பட்டியல் / தடை செய்யப்பட்ட பணிகளைத்" தவிர பிற பணிகளை எடுத்துச் செய்யலாம். 6. எதிர்மறையான பட்டியல் / தடை செய்யப்பட்ட பணிகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், பின்வரும் எதிர்மறையான பட்டியல் / தடை செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ளல் கூடாது. அவற்றுள் விதிவிலக்காக எடுத்து செய்ய செய்ய அனுமதிக்கப்பட்ட பணிகளை விதிமுறைகளின் படி மேற்கொள்ளலாம். 6.1 மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளைச் சார்ந்த அலுவலக கட்டடங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் ஆகியவற்றிற்கான அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வசிப்பிடங்கள் கட்டுதல். விதிவிலக்குகள்: (i) நேரடிக் கொள்முதல் நிலையங்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கக் கட்டடங்கள், மொத்த பால் குளிரூட்டும் மைய கட்டடங்கள் கட்டுதல். (ii) தமிழ்நாடு (iii) 6.2 6.3 அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்து பணிமனைகளுக்கான பேருந்து பராமரிப்புக் கூடம், சுற்றுச்சுவர், சிமெண்ட் கான்கிரீட் தளம், தொழிலாளர் ஓய்வறை மற்றும் கழிவறை கட்டுதல். பொது விநியோக கடை கட்டடங்கள் கட்டுதல். தனிநபர் / குடும்பப் பயனுக்காக சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் அவற்றிற்கு அனைத்து வகையான புதுப்பித்தல், பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் பணிகள் மேற்கொள்ளுதல். அசையும் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தளவாடச் சாமான்கள் வாங்குதல். விதிவிலக்குகள்: (i) அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசு விடுதிகள், அரசு மருத்துவமனைகள், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு சாமான்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல். இத்தலைப்பின்கீழ் மொத்த செலவினத் தொகை ஆண்டிற்கு ரூ.25 இலட்சத்திற்கு மேற்படக்கூடாது. தளவாட (ii) அரசாணை (1டி) எண். 405, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (மா.அ.தி-1) துறை, நாள் 17.08.2010 மற்றும் அரசு கடித (1டி) எண். 653, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நாள் 31.12.2012-ல் குறிப்பிட்டுள்ளபடி ரூ.5 இலட்சம் வரையிலான மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல். (iii) போலியோ மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்காக Cerebral Palsy (CP) Chair வாங்குதல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய அரசு சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டு, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கற்பிக்கும் கருவிப் பெட்டிகள் வாங்குதல். (iv) உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான உடற்பயிற்சி / ஜிம்னாசியக் கூடத்தில் (physical fitness centre / Gymnasium) உடற்பயிற்சி செய்ய தேவையான கருவிகள் வாங்குதல். இவை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் சொத்தாகக் கருதப்படும். (v) அரசு மருத்துவமனை/ தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தினால் வழங்க இயலாத, குழந்தைகளுக்கான (18 வயதிற்குட்பட்ட) உயிர்காக்கும் மருந்துகளை வாங்க ஓராண்டிற்கு 5 இலட்சத்திற்கு மிகாமல் செலவினம் மேற்கொள்ளலாம். 6.4 அனைத்து வணிக நிறுவனங்கள்/ அலகுகள் தொடர்புடைய பணிகள். 6.5 மானியம் மற்றும் கடன் வழங்குதல் மற்றும் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிவாரண நிதிக்கு பங்களித்தல். 6.6 நில எடுப்பு அல்லது நில எடுப்பிற்கான ஈட்டுத் தொகை வழங்குதல். முழுமையாக முடிக்கப்பட்ட பணிகள், பகுதியாக முடிக்கப்பட்ட பணிகள் அல்லது இனங்களுக்கான தொகை மீளச் செலுத்துதல். 6.7 6.8 அனைத்து விதமான வருவாய் செலவினங்கள் (Revenue Expenditure) மற்றும் தொடர் செலவினங்களை (Recurring Expenditure) ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல். 6.9 மத வழிபாட்டு இடங்களில் பணிகள் மற்றும் மத அமைப்புகள்/ குழுக்களுக்கு சொந்தமான நிலங்களில் பணிகளை மேற்கொள்ளுதல். 6.10 குட்டைகள், ஊருணிகள், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை தூர் வாருதல் மற்றும் அது போன்ற பணிகளை மேற்கொள்ளுதல். 6.11 சரளை / கப்பி சாலைகள் மேற்கொள்ளுதல் (தார்சாலை வரை அமைக்கும் சாலைப் பணிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்). 6.12 உயர்மின் கோபுர மற்றும் சிறு மின் கோபுர விளக்குகள் பொருத்துதல். 6.13 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் உயர்தர திறன் வகுப்பறைகள் (Smart Classroom) உருவாக்குதல். 6.14 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் இதர நிறுவனங்களில் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளுதல். விதிவிலக்கு: அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக சமையற்கூடம் கட்டுதல். 6.15 அனைத்து வகையான புதுப்பித்தல், பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் பணிகள் மேற்கொள்ளுதல். 7. நிதி விடுவிப்பு மற்றும் நிதி மேலாண்மை 7.1 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், அரசின் ஆண்டு வரவு செலவு மதிப்பீட்டின்படி, அனைத்து மாவட்டங்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான நிதியினை விடுவிப்பார். 7.2 சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டாலோ, அவரால் பரிந்துரை செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் செய்து முடிக்கப்பட வேண்டும். பரிந்துரைக்கப்படாத தொகை, அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 7.3 காலாவதியான நிதிகள்: இத்திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது பேரவை காலம் முழுமைக்குமானது. இத்திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் மீதப்படும் தொகையினை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு கொண்டு சென்று அந்த தொகுதிக்கு அப்பேரவைக்காலம் முழுமைக்கும் பயன்படுத்தலாம். 7.4 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு மாநில அளவில் ஒற்றைச் சாளர வங்கிக் கணக்கு (Single Nodal Account) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரால் பராமரிக்கப்படும். இக்கணக்கிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் தொகை விடுவிப்பு செய்யப்படும். 7.5 மாவட்ட நிர்வாகம் மாநில அளவில் பராமரிக்கப்படும் ஒற்றைச் சாளர வங்கிக் கணக்கிலிருந்து (SNA) செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு/ அலுவலர்களுக்கு நிதி விடுவிக்க வேண்டும். 7.6 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியினை மாவட்ட நிர்வாகம் மற்றும் செயல்படுத்தும் நிறுவனங்கள் வங்கிக் கணக்குகளிலோ அல்லது மாநில அரசின் கருவூல கணக்கிலோ செலுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 7.7மாவட்ட நிர்வாகம் மற்றும் செயல்படுத்தும் நிறுவனங்கள்/ அலுவலர்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக எந்த ஒரு வங்கி கணக்கையும் தொடங்குவதோ அல்லது பராமரிப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. 8 கணக்கியல் நடைமுறை 8.1 செலவிடப்படாத தொகைக்கு சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து பரிந்துரை பெற்று நிர்வாக அனுமதி வழங்கப்பட வேண்டும். பணிகளை செயல்படுத்தி அனைத்துப் பட்டியல் தொகைகளும் வழங்கப்பட்ட பிறகு மீதம் இருக்கும் தொகையினை சேமிப்பு நிதியாகக் கருதப்பட வேண்டும். 8.2 சட்டமன்ற பேரவைக் காலம் முடிவுற்ற பின்னர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டக் கணக்குகளில் உள்ள பரிந்துரைக்கப்படாத தொகை, சேமிப்பு மற்றும் வட்டித்தொகை யாவும் அடுத்து வரும் சட்டமன்றப் பேரவைக்கான உறுப்பினர்கள் திட்டப் பணிகளுக்காகப் பயன்படுத்திட இயலாது. அத்தொகை முழுமையாக அரசு கணக்கில் உரிய தலைப்பின்கீழ் செலுத்தப்பட வேண்டும். 8.3 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட கணக்குப் புத்தகம் மற்றும் இதர கணக்குகளை மாநில அரசின் உரிய விதிகளின்படி மாவட்ட நிர்வாகத்தினால் பராமரித்தல் வேண்டும். 8.4 பணி நிறைவு பெற்றவுடன் பணியினை செயல்படுத்தும் நிறுவனம்/ அலுவலர் பணி நிறைவு அறிக்கையினை 15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும். 8.5 மாவட்ட நிர்வாகம் நிறைவுற்ற பணிகளுக்கு பணி முடிவு அறிக்கையினை கவனமுடன் பரிசீலித்து பின்பு நிதியினை ஒற்றைச் சாளர வங்கி கணக்கு (SNA) மூலம் விடுவிக்க வேண்டும். 8.6 மாவட்ட நிர்வாகம் பயன்பாட்டு சான்றினை (Utilization Certificate) ஆண்டுதோறும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு அனுப்பி வைத்திட வேண்டும். 9 கண்காணித்தல் 9.1 மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் மற்றும் பொறுப்புகள்: (i) மாவட்ட அளவில் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கு மாவட்ட நிர்வாகமே பொறுப்பாகும். (ii) மாவட்ட நிர்வாகம் (மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி)) தொடர்ந்து களநிலை ஆய்வுகளை மேற்கொண்டு, இடப் பிரச்சனைகளைத் தீர்த்து, "தொடங்கப்படாத பணிகளை" தொடங்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பணிகளின் தரத்தை உறுதி செய்து உரிய நேரத்தில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். (iii) சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒட்டு மொத்த நிதியில் 22 சதவீதத்தினை ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழும் ஊரகப் பகுதிகளிலும் மற்றும் நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதிக்கென செயல்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும். (iv) சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் சொத்துகள் பற்றிய விவரங்களை சொத்துகள் பதிவேட்டில் (Asset Register) பதிந்து, தொகுதி வாரியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினால் பராமரிக்கப்பட வேண்டும். (v) சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட சொத்துகள் பயன்பாட்டுத் துறை / பயனாளிக்கு உரிய விதிமுறைப்படி ஒப்படைத்தல் வேண்டும். (vi) சட்டமன்ற கீழ் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளின் விவரங்களையும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டவுடன் www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு பணிக்கும் வேலை / பணி அடையாள எண் (Work ID) உருவாக்கப்பட வேண்டும். 9.2 செயல்பாட்டு நிறுவனங்கள்/அலுவலர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள்: (i) பணிகள் நடைபெறும் இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து பணிகளின் முன்னேற்றத்தினை உறுதி செய்வது செயலாக்க நிறுவன அலுவலர்களின் பொறுப்பாகும். (ii) செயலாக்க நிறுவனங்கள்/ அலுவலர்கள் 100% அனைத்து பணிகளையும் ஆய்வு செய்தல் வேண்டும். (iii) மாவட்ட நிர்வாகம் சார்பாக அலுவலர்கள் (மாவட்ட ஆட்சித்தலைவர், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)/திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி)) அவர்களின் ஆய்வின் போது செயலாக்க நிறுவனம்/ அலுவலர்கள் உடன் இருந்து தேவையான விவரங்களை வழங்கி கள ஆய்விற்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். (iv) மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்படும் கள ஆய்வின் போது சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். (v) செயலாக்க நிறுவனங்கள்/ அலுவலர்கள் பணிமுடித்த 15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் பணிமுடிவறிக்கையினை அப்பணிகளுக்கான நிர்வாகத்திடம் HIGH Resolution GPS-புகைப்படங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். 10. வழிகாட்டு நெறிமுறைகளின் செயலாக்கம் மேலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உடன் அமலுக்கு வருகிறது. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ஆணைகளுக்கு மாற்றாக வெளியிடப்படுகிறது. திட்டச் செயலாக்கத்தின்போது, தேவையின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருடன் கலந்தாலோசித்து மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தேவையான மாறுதல்களை செய்து கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது.
CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.46 - MLACDS PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.