ஏப். 15-ல் உள்ளூர் விடுமுறை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 11, 2025

ஏப். 15-ல் உள்ளூர் விடுமுறை!



ஏப். 15-ல் உள்ளூர் விடுமுறை!

திருச்சி மாவட்டத்துக்கு வரும் ஏப். 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப். 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் வரும் மே 3 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி இத்திருத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவபதத்தில் விக்ரமசிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

இத்தகைய சிறப்புக்குரிய இத்தலத்தில் சித்திரைப் பெருந்திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் திருச்சி மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.